தென்தமிழகத்தில் வாழ்ந்த தென்கலை ஐயங்கார் குடும்பத்தின் நான்கு தலைமுறை கதைதான் புலிநகக்கொன்றை. இதன் ஆசிரியர் அதே சமூகத்தைச் சேர்ந்தவரென்றாலும்,ஒரு பரிவுடன் இதை எழுதவில்லை.ஒவ்வொரு கதாபாத்திரத்தின் சித்தரிப்பும் விரிவானவை.கதைச்சித்தரிப்பும் ஒரே காலவரிசையில் இல்லாமல் கடந்த காலமும் நிகழ்காலமும் மாறிமாறி வருகின்றன.