முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மார்ச், 2026 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சலம் - பா.ராகவன்

                                இந்த நாவல் அதர்வண வேத காலத்தில் நடக்கும் கதை.நாவலின் பின் அட்டையில் சொல்லியபடி இது ஒரு முன்னுதாரணம் அற்ற நாவல்.சரஸ்வதி நதி எவ்வாறு மறைந்திருக்கும் என்பதை விவரிக்கும் ஒரு மாய யதார்த்த நாவல்.           அதர்வன்,குத்சன்(சுத்திர முனி),சாரன்,விண்ணுலா,காமாயனி- இவர்கள் தான் முக்கிய கதாபாத்திரங்கள்.அதர்வ மஹரிஷி தன் ஆசிரமத்தில் பல்வேறு தரப்பட்ட மாணாக்கர்களுக்கு பாடம் கற்பிக்கிறார்.ஆனால் குத்சனை மட்டும் தவிர்க்கிறார்.குத்சனை முனி என்றும் அங்கீகரிக்கிறார்.குத்சன் அதர்வன் மேல் பெருமதிப்பு வைத்திருந்தாலும் ,தன்னை சீடனாக ஏற்க மறுப்பதால் அதர்வன் மேல் கோபம் கொள்கிறார்.ஒரு கட்டத்தில் ஒருவர் மேல் மற்றொருவர் மாறி மாறி சாபம் கொள்கிறார்கள்.இயற்கை ரிதனின் படி அதர்வன் பிறப்பும் இறப்பும் அற்றவன்.ஆனால் குத்சனின் சாபம் அதை குலைக்கிறது.குத்சனின் சாபத்தை நிறைவேற்ற பைசாச குலத்தைச் சேர்ந்த சாரன் வருகிறான்.கடைசியில் சாரன் எவ்வாறு அதர்வனை கொல்கிறான்,சரஸ்வதி நதி எ...