முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூன், 2026 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

The Brothers Karamazov - Fyodor Dostoevsky

                ஒழுக்கமில்லாத தந்தை, அவரது மூன்று மகன்கள்.மூவரும் வெவ்வேறு விதமான வளர்ப்பு முறைகள்,சித்தாந்தங்கள்,நம்பிக்கைகள் கொண்டவர்கள்.இவர்களை மையமாக வைத்தே இறைநம்பிக்கை(faith),துன்பப்படுதல்(suffer),மன உளைச்சல் பற்றி ஆராயும் மிக நீண்ட நாவல்.               இந்த நாவல் இறைநம்பிக்கை,வாழ்வியல் அறங்களை அழுத்தமாக பதிவு செய்கிறது.அறிவியல் மற்றும் நவீன அற மதிப்பீடுகளை கேள்விக்குட்படுத்துகிறது.கொஞ்சம் பழமைவாதத்தை பேசும் நாவல் என்பதுபோல் தோன்றினாலும் அவை விமர்சனமும் செய்யப்படுகின்றன.சொல்லவரும் விஷயத்தை ஆழமாக அலசுகிறார்.பல இடங்களில் இதில் வரும் போதனைகள் cringeஆக இருந்தாலும் சுவாரஸ்யமான நாவல்.               முதலில் தந்தை பல தவறுகளைச் செய்கிறார்.அதில் ஒன்று லிசாவிட்டா என்ற பெண்மணியை வன்புணர்வு செய்கிறார்.அவருக்கு பிறக்கும் மகன் தான் Smerdyakov.இது வெளிப்படையாக சொல்லப்படவில்லை.அவன் நன்றாக படித்து பெரியவனானாலும் ,தன் பிறப்பு பற்றிய தாழ்வு மனப்பான்மை அந்த மகனை வாட்டுகிறது.கூடவ...