முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூன், 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

வெண்முரசு - ஜெயமோகன்

சென்னை எழும்பூரில் நடைபெற்ற வெண்முரசு முதல் நான்கு நூல் வெளியீட்டு விழாவில்(கமல்,அசோகமித்ரன் பங்கேற்ற)  முதற்கனல் மற்றும் வண்ணப்பாடல் நூல்களை வாங்கினேன்.ஆனால் வாங்கியதை அப்படியே அலமாரியில் வைத்துவிட்டேன்.நான்கு ஆண்டுகள் கழித்துத்தான் படிக்க ஆரம்பித்தேன்.வெண்முரசு   படிக்க ஆரம்பித்த்திலிருந்து அடுத்த இரண்டாண்டுகள் வேறு எந்த புத்தகமும் படிக்கவில்லை.தொடர்ச்சியாக  26 பாகங்களையும் படித்து முடித்தேன்.வெண்முரசை முழுமையாக படித்து முடித்ததே என்னளவில் பெரும்சாதனை.இதை எழுதிய ஜெயமோகனுக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள். முதற்கனலில் மானசாதேவி,அவள் மகன் ஆஸ்திகன் அவர்களுடைய வீடு, காடு என அனைத்தும் என் கண்முன் உள்ளது.முதல் பாகத்திலிருந்து இறுதி பாகம் வரை இந்த நூலில் உள்ள அனைத்து இடங்களுக்கும் ஏதோ நானே நேரில் சென்று தொட்டுப்பார்த்ததாகவே உணர்கிறேன்.அவ்வளவு வர்ணனை.துரோனரின் இளமை பருவம் முதல் அவர் ஆசிரியர் ஆகும் வரை உள்ள காலம் ,அவர் வாழ்ந்த இடத்தின் வர்ணனை இன்றும் பசுமையாக என் கண்முன் உள்ளது.அவர் இளமைபருவம் படிக்கும் போது கொஞ்சம் பரிதாபமாக இருந்தது. வெண்முரசில் கிருஷ்ணர்(இளைய யாதவர்) என...