Pather Panchali - Bibhutibhushan Bandyopadhyay

                இந்த வருடம் நான் படித்த மிகச் சிறந்த நாவல் என்றால் அது இதுதான்.மிகச் சிறந்த நாவல்.கொஞ்சம் கூட மிகையில்லாமல் யதார்த்தமாக வங்கத்தின் கிராமிய வாழ்க்கையை படம் பிடித்துக்காட்டுகிறார்.நாவல் முழுவதும் சிறுவர்கள் பார்வையிலேயே எழுதப்பட்டுள்ளதால் சாதாரணமாக தெரியும் விஷயங்களும் அசாதரணமாக ஆகிவிடுகின்றன.

Crime and Punishment

                ராஸ்கோல்நிகோவ் என்னும் இளைஞன் இரு கொலைகளைச் செய்கிறான்.ஏன் இந்த கொலைகளை செய்தான்?கொலைக்கு பின்னான அவன் மனப்போராட்டம் .இதையேயே மையமாக வைத்து   எழதபட்ட மிகமிக சுவார்ஸ்யமான,விருவிருப்பான நாவல்.இது வெறும் துப்பரியும் நாவல் மட்டும் இல்லை.

Sapiens: A Brief History of Humankind - Yuval Noah Harari

                 இது நான் மிகுந்த ஆவலுடன் படிக்கத் துவங்கிய நூல்.ஆனால் படித்து முடிக்கும் போது மிகுந்த ஏமாற்றத்துடன் இருந்தது.ஹராரி ஒரு பிரசாரகர்(propagandist).காலனியாதிக்கம்,முதலாளித்துவம்,மேற்கத்திய மேட்டிமைவாதம் இவைகளின் பிரசாரகர்.இந்த நூலில் எனக்கிருந்த பிரச்சனைகளை கீழே பட்டியலிடுகிறேன்.

ஜெயமோகன் குறுநாவல்கள்

கிளிக்காலம்:
        ஒரு விடலைச்சிறுவன் பெரியவனாகும் கதை.ஜெயமோகன் தரத்தில் இது சுமார் கதை.ஆனால் இதிலும் நல்ல விவரணை.கதை களத்தை கண்முன் காட்டும்படி விவரித்திருக்கிறார்.

White Mughals - William Dalrymple

               பதினெட்டாம் நாற்றாண்டின் இறுதியில் கிழக்கிந்திய கம்பெனியில் பணியாற்றிய ஓர் ஆங்கிலேய அதிகாரிக்கும்(ஜேம்ஸ் கிரிக்பட்ரிக்) இந்திய முகலாய ஆளும் வர்க பெண்ணுக்கும்  (கைர்-உன்-நிசா பேகமமுடன்) இடையிலான காதலை முன் வைத்து எழுதப்பட்ட வரலாற்று நூல்.White Mughals என்றால் இந்திய முகலாய மூஸ்லீம் பெண்களை மணந்த கிழக்கிந்திய கம்பெனியின் ஆங்கில அதிகாரிகள்.இவர்கள் மற்றைய ஆங்கில அதிகாரிகளை போல் சுரண்டல் ஒன்றையே குறிக்கோளாக கொள்ளாமல் இந்தியாவை கொஞ்சம் அனுதாபத்தோடு அணுகியுள்ளனர்.இப்படிபட்ட சிலபல அதிகாரிகளில் ஒருவர் ஜேம்ஸ் கிரிக்பட்ரிக்.

இரவு - ஜெயமோகன்

           பகலின் இடைவேளையை தவிர்த்தால் இரவுதான் தொடர்ச்சியானது.இரவே உண்மை வெளிப்படும் வெளி.பகலில் உண்மை மீது வெளிச்சம் எனும் போர்வை மூடப்பட்டு பாசாங்குகளே வெளிப்படுகின்றன.உண்மையை தாங்க முடியாத எளிய உள்ளங்களின் உலகமே பகல்.உண்மையை கண்டு அஞ்சாமல் , பகலின் பாசாங்குதனத்தில் வாழ முடியாதவர்களின் உலகமே இரவு.இரவிலேயே அழகு கூர் கொள்ளும்.மேற்சொன்னவற்றையே மையமாக வைத்து ஒரு புது அனுபத்தை ஒரு நாவலாக தந்திருக்கிறார் ஆசிரியர்.ஜெயமோகனின் மிகச்சிறந்த நாவல்களில் இதுவும் ஒன்று.

The Last Mughal - William Dalrymple

         முதல் இந்திய சுதந்திரப்போர் என்று அழைக்கப்படும் சிப்பாய்கழகம் 1857ல் நடந்தது, பிரிட்டிஷ்ஷார் மாடு மற்றும் பன்றி கொழுப்பு தடவிய குண்டுகளை பயன்படுத்தியதால் இந்து மற்றும் முஸ்லீம் சிப்பாய்கள் புரட்சியில் ஈடுபட்டனர்.இதுவே என் புரிதல்.ஆனால் இந்த புத்தகம் படித்த பின்தான்  சிப்பாய்கழகத்திற்கான காரணங்கள் ஒன்றல்ல, பற்பல சிக்கலான காரணிகள்.இந்நூலாசிரியர் 1850கள் வாக்கில் டெல்லியில் நடந்த  அனைத்து நிகழ்வுகளையும்  விவரித்திருக்கிறார்.இந்த புத்தகத்தை படிக்கும் முன் இதே ஆசிரியர் எழுதிய The Ananarchy படித்திருந்தேன்.The Last Mughalம் அந்த நூலின் தொடர்ச்சியாகத்தான் எனக்குத் தெரிந்தது.சுருக்கமாக இந்த இரு நூல்களைப் பற்றி சொல்ல வேண்டுமென்றால் அற்புதம்,அபாரம்.