முதல் இந்திய சுதந்திரப்போர் என்று அழைக்கப்படும் சிப்பாய்கழகம் 1857ல் நடந்தது, பிரிட்டிஷ்ஷார் மாடு மற்றும் பன்றி கொழுப்பு தடவிய குண்டுகளை பயன்படுத்தியதால் இந்து மற்றும் முஸ்லீம் சிப்பாய்கள் புரட்சியில் ஈடுபட்டனர்.இதுவே என் புரிதல்.ஆனால் இந்த புத்தகம் படித்த பின்தான் சிப்பாய்கழகத்திற்கான காரணங்கள் ஒன்றல்ல, பற்பல சிக்கலான காரணிகள்.இந்நூலாசிரியர் 1850கள் வாக்கில் டெல்லியில் நடந்த அனைத்து நிகழ்வுகளையும் விவரித்திருக்கிறார்.இந்த புத்தகத்தை படிக்கும் முன் இதே ஆசிரியர் எழுதிய The Ananarchy படித்திருந்தேன்.The Last Mughalம் அந்த நூலின் தொடர்ச்சியாகத்தான் எனக்குத் தெரிந்தது.சுருக்கமாக இந்த இரு நூல்களைப் பற்றி சொல்ல வேண்டுமென்றால் அற்புதம்,அபாரம். இந்த ஆசிரியரின் சிறப்பென்பது முதலில் அவரின் மொழிநடை.அடுத்தடுத்து நிகழ்வுகளை அடுக்கிச் சொல்லும் பாங்கு.ஒவ்வொரு நிகழ்வையும் இந்தியர்களின் பார்வையிலும் அதே நிகழ்வை ஆங்கிலேயர்களின் பார்வையிலும் சொல்லும் விதம்.நான் ஒரே ஒரு முறைதான் டெல்லி சென்றிருக்கிறேன்.ஆனால் மீண்டு...
I write book reviews here