பகலின் இடைவேளையை தவிர்த்தால் இரவுதான் தொடர்ச்சியானது.இரவே உண்மை வெளிப்படும் வெளி.பகலில் உண்மை மீது வெளிச்சம் எனும் போர்வை மூடப்பட்டு பாசாங்குகளே வெளிப்படுகின்றன.உண்மையை தாங்க முடியாத எளிய உள்ளங்களின் உலகமே பகல்.உண்மையை கண்டு அஞ்சாமல் , பகலின் பாசாங்குதனத்தில் வாழ முடியாதவர்களின் உலகமே இரவு.இரவிலேயே அழகு கூர் கொள்ளும்.மேற்சொன்னவற்றையே மையமாக வைத்து ஒரு புது அனுபத்தை ஒரு நாவலாக தந்திருக்கிறார் ஆசிரியர்.ஜெயமோகனின் மிகச்சிறந்த நாவல்களில் இதுவும் ஒன்று. ஒரு அந்நியரான சரவணனை எப்படி முதல் சந்திப்பிலேயே மேனன் தம்பதியினர் அவ்வளவு அந்யோந்யமாக ஏற்று அவருக்கு பெண் பார்க்குமளவிற்கு செல்வார்கள் என்ற நெருடல் முதலில் இருந்தாலும் , போகப்போக நாவல் பயனித்த தளமும் வேகமும் அந்த நெருடலை ஒன்றுமில்லாது செய்துவிட்டன. ஜெயமோகனின் மற்ற நாவல்களைப் போலவே இதிலும் எளிய மனிதர்களே இயற்கையை முழுமையாக புரிந்து ...
I write book reviews here