ஊமைச்செந்நாய் - ஜெயமோகன்

காடன் விளி:

        இந்த தொகுப்பில் மிகச் சிறந்த கதையென எனக்குப் படுவது இது தான்.விளி என்றால் அழைத்தல்.அதாவது காடனை அழைத்தல் என்பதே தலைப்பு.இந்த கதையை தந்தை வழி சமூகமான நமக்கு(தமிழ் மக்களுக்கு) புரிந்துகொள்ள அல்லது ஏற்றுக் கொள்ள சிறிது கடினமாக இருக்கலாம்.பெண்களின் காம தவிப்பை விவரிக்கும் கதையாகவே நான் புரிந்து கொள்கிறேன்.கதை சொல்லியான சிறுவன்  வீட்டில் வேலை செய்யும் ஒருவர், ஏதோ நேர்ச்சைக்காக வெளியே(?) சென்றிருக்கும் போது,சிறுவனும் அவன் அப்பாவும் வீட்டிற்க்குள் தங்காமல், வெளியே உறங்குகிறார்கள்.எனக்கு தி.ஜா. எழுதிய அம்மா வந்தாள் தான் ஞாபகம் வந்தது.கதையின் முடிவில் காடன் மலையிலிருந்து பாறைகள் உருண்டு விழாததால் இது ஒரு பாவச் செயல் அல்ல என்பதாக புரிந்து கொள்ளலாம். எருமை மாட்டின் கூர்மையான மழுங்கிய கொம்பை பற்றிய விவரணை பலே :) !!

வனவாசி - விபூதிபூஷண் பந்தோபாத்யாய

                இந்த நாவலின் கதாநாயகன் காடுதான். ஒரு காடு திருத்தப்பட்டு கழனியாகப்படுகிறது.இதை கதை சொல்லியே முன்னின்று நடத்துகிறார்.இதற்காக வருத்தப்பட்டாலும் அவரால் எதையும் செய்ய முடியவில்லை.

Kohinoor: The Story of the World's Most Infamous Diamond - William Dalrymple & Anita Anand

            கோகினூர் வைரத்தைப் பற்றிய முழுத் தகவல்களும் விரிவாக பதிவு செய்யப்பட்ட நூல். அந்த வைரத்தை வைத்திருந்த மன்னர்கள் மற்றும் மன்னர்களின் வாரிசுகளின் போர் வெற்றிகள், அவர்களின் கோரமான முடிவுகள் விரிவாக பதிவு செய்யப்பட்டுள்ளன.நிச்சயமாக அந்த காலத்தில் சாதாரண குடிமக்கள் மன்னர்களை விட நிம்மதியாக வாழ்ந்திருப்பார்கள்.மன்னர் குடும்பங்களில் எவ்வளவு கொலைகள், எவ்வளவு முதுகு குத்தல்கள்.

The Brothers Karamazov - Fyodor Dostoevsky

ஒழுக்கமில்லாத தந்தை, அவரது மூன்று மகன்கள்.மூவரும் வெவ்வேறு விதமான வளர்ப்பு முறைகள்,சித்தாந்தங்கள்,நம்பிக்கைகள் கொண்டவர்கள்.இவர்களை மையமாக வைத்தே இறைநம்பிக்கை(faith),துன்பப்படுதல்(suffer),மன உளைச்சல் பற்றி ஆராயும் மிக நீண்ட நாவல்.

சலம் - பா.ராகவன்

                 இந்த நாவல் அதர்வண வேத காலத்தில் நடக்கும் கதை.நாவலின் பின் அட்டையில் சொல்லியபடி இது ஒரு முன்னுதாரணம் அற்ற நாவல்.சரஸ்வதி நதி எவ்வாறு மறைந்திருக்கும் என்பதை விவரிக்கும் ஒரு மாய யதார்த்த நாவல்.

நீலவானம் - ரமணன்

              இந்த குறுநாவலைப் படித்தது ஒரு திரைப்படம் பார்த்ததைப் போன்று காட்சிகள் கண்முன் விரிகின்றன.படு விறுவிறுப்பான நாவல்.நான் பல முறை விமானத்தில் பயணித்திருக்கிறேன்.பல நாட்டு விமான நிலையங்களில் சுற்றியிருக்கிறேன்.ஆனாலும் இதில் வரும் விமான நிலைய வருணிப்பு சுவாரஸ்யமாகவே இருந்தது.எப்போதும் எனக்கு விமானப்பயணம் களிப்பூட்டுவதாக இருந்தாலும் வெளிக்காட்டிக்கொள்ளாத சிறு பயமும் உண்டு.அந்தரத்தில் பறக்கும் விமானம் சிறிது நடுங்கினாலும் பயம்.ஐரோப்பாவிலிருந்து அமெரிக்கா செல்லும் போது ஆறு மணிநேரம் கடலுக்கு மேலேயே பயணம் செய்யும் போதும் பயம்.அந்த வரிசையில் தீவிரவாதிகளின் கடத்தல் பற்றிய பயமும் சிறிதளவு உண்டு.