முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

புலிநகக் கொன்றை - பி.ஏ.கிருஷ்ணன்

புலிநகக் கொன்றை - பி.ஏ.கிருஷ்ணன் - காலச்சுவடு பதிப்பகம் | panuval.com     

    தென்தமிழகத்தில் வாழ்ந்த தென்கலை ஐயங்கார் குடும்பத்தின் நான்கு தலைமுறை கதைதான் புலிநகக்கொன்றை. இதன் ஆசிரியர் அதே சமூகத்தைச் சேர்ந்தவரென்றாலும்,ஒரு பரிவுடன் இதை எழுதவில்லை.ஒவ்வொரு கதாபாத்திரத்தின் சித்தரிப்பும் விரிவானவை.கதைச்சித்தரிப்பும் ஒரே காலவரிசையில் இல்லாமல் கடந்த காலமும் நிகழ்காலமும்  மாறிமாறி வருகின்றன.
    பொன்னா பாட்டி,நம்மாழ்வார்,நம்பி.கண்ணன் கதாபாத்திரங்கள் விரிவாக சித்தரிக்கப்பட்டுள்ளன.பட்சி,திருமலை,மதுரகவி,ராதா கதாபாத்திரங்கள் மிக குறைவாக விவரிக்கப்பட்டுள்ளனர்.ஆண்டாள்,ரோசா  கதாபாத்திரங்கள் பரவாயில்லை .
    இளம்  விதவைகளிண் அன்றைய பரிதாபத்துக்குரிய நிலை ஆண்டாள் கதாபாத்திரம் மூலம் துல்லியமாக சித்தரிக்கப்பட்டுள்ளது.ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு பெண் இதைப்போல் இருந்திருப்பாள்.ஆண்டாளின் தந்தை ஜீயரிடம் தன் மகள் மறுமணம் பற்றி யோசனை கேட்க ,அவர்   அது   வைஸ்ணவ சம்பிரதாயத்திற்க்கு  எதிராணததென்று அனுமதி மறுக்க,ஆண்டாளின் வாழ்க்கையே தடம் புரள்கிறது.

    கதை முழுதும் ஒவ்வொரு தலைமுறையிலும் ஒரு துர் மரணம்.பொன்னாவின் தாத்தா ஆங்கிலேய ஆட்சியில்  துப்பாக்கி சூட்டில் மடிகிறார்.பொன்னாவின் மாமியார் மறவர்களின் கொள்ளையின் போது கொல்லபப்படுகிறார்.பொன்னாவின் பேரனும்,கொள்ளுப்பேரனும் அரசியலியக்க செயல்பாடுகளால் கொல்லப்படுகிறார்கள்.பொன்னாவின் மகன் நம்மாள்வார் மட்டும் துறவறம் மேற்கொண்டு தப்பித்து கொள்கிறார்.
    கதையில் அங்அங்கே சில surpriseகள் உண்டு.ஆண்டாளுக்கு பாம்புக்கடி பட்ட  அன்றைய இரவில் நடந்த சம்பவங்களில் நாமொன்று நினைக்க ,நடந்தது வேறு.நம்பி உண்மையிலேயே குற்றாலத்திலிருந்து புனலூருக்குச் சென்றது தற்செயலானதென்றாலும், நக்சலைட் முகுந்தன் மேனனை சந்தித்திருக்கவே வாய்ப்புகள் அதிகம்.கதை முழுதும் தீவிர அரசியல் சார்படைய அனைவரும் ஏமாற்றத்தையே அடைகிறார்கள்.

     நாவல் முழுதும் வரும் மேற்கோள்கள்,ஆங்கில,தமிழ் கவிதைகள்,அந்தந்த காலத்திய புத்தகங்கள் அனைத்தும் ஆசிரியரின் பரந்துபட்ட வாசிப்பையும் விசாலமாண பார்வையும் புலப்படுத்துகின்றன.

    பி.ஏ.கிருஷ்ணன் எழுதிய நாவல்களில் நான் முதலில் படித்த்து கலங்கிய நதி.அது அஸ்ஸாமில் நடந்த கடத்தல் சம்பவம் பற்றியது.அது நல்ல நாவல் என்றாலும்,விரைவாக பயணம் செய்ததுபோல் இருந்த்து.ஆனால் புலிநகக் கொன்றை நிறுத்தி நிதானமாக ஒரு மூன்று தலைமுறைப்  பயணம்.இதில் வரும் கதாபாத்திரங்கள் நீண்டநாள் நம் நினைவில் பயணம் செய்வார்கள்.  

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Crime and Punishment

                                                   ராஸ்கோல்நிகோவ் என்னும் இளைஞன் இரு கொலைகளைச் செய்கிறான்.ஏன் இந்த கொலைகளை செய்தான்?கொலைக்கு பின்னான அவன் மனப்போராட்டம் .இதையேயே மையமாக வைத்து   எழதபட்ட மிகமிக சுவார்ஸ்யமான,விருவிருப்பான நாவல்.இது வெறும் துப்பரியும் நாவல் மட்டும் இல்லை.             ராஸ்கோல்நிகோவ் ஒரு மதுபான விடுதியில் தற்செயலாக மார்மல்யாடோவை சந்திக்கிறான்.மார்மல்யாடோவ் தன் சோக கதையை ராஸ்கோல்நிகோவிடம் விவரிக்கிறார்.ஒட்டுமொத்த நாவலிலும் மிகச் சிறந்த பகுதி என்று இதைத்தான் குறிப்பிடுவேன்.மார்மல்யாடோவ் தன் முதல் மனைவி மூலம் பெற்ற மகள் சோபியா(சோனியா).பதின்ம வயது.முதல் மனைவி இறந்தவுடன் இரண்டாம் திருமணம் செய்து கொள்கிறார்.அவரின் இரண்டாம் மனைவிக்கும்(கட்ரினா இவானோவ்னா) இது இரண்டாம் திருமணம்.அவரின் முதல் திருமணம் மூலம் ஏற்கனவே மூன்று குழந்தைகள்.மூவரும் பால்ய வயதினர்.மார்மல்யாடோவ் தன் குடும்பத்த...

Sapiens: A Brief History of Humankind - Yuval Noah Harari

                     இது நான் மிகுந்த ஆவலுடன் படிக்கத் துவங்கிய நூல்.ஆனால் படித்து முடிக்கும் போது மிகுந்த ஏமாற்றத்துடன் இருந்தது.ஹராரி ஒரு பிரசாரகர்(propagandist).காலனியாதிக்கம்,முதலாளித்துவம்,மேற்கத்திய மேட்டிமைவாதம் இவைகளின் பிரசாரகர்.இந்த நூலில் எனக்கிருந்த பிரச்சனைகளை கீழே பட்டியலிடுகிறேன்.               ஆதிகாலத்தில்  மனிதன் அமெரிக்காவிற்க்கும், ஆஸ்திரேலியாவிற்க்கும் முதன்முதலில் குடியேறிய நாட்களில்  அங்கு அவர்கள் செய்ததாக சொல்லப்படும் செயல்கள் ஊகங்களே(எ.கா.பெரும்பான்மையான அரிய வகை விலங்குகளை கொன்றொழித்தது).அதற்கு எந்தவித உறுதியான ஆதாரங்களும் இல்லை.ஆனால் ஹராரி எல்லாவற்றையும் விலாவாரியாக ஏதோ நேரில் பார்த்தவர் போல்  விவரிக்கிறார்.ஏன் இவ்வாறு செய்கிறார் என்பது நூலின் பிற்பகுதியை படிக்கும் போதுதான் புரிகிறது.மேற்கத்தியர்கள் காலனியாதிக்கதின் போது அவர்கள் செய்த கொடுஞ்செயல்களை ஆதிகால பழங்குடியினர் செய்த செயல்களோடு ஒப்பிடும் போது ஒன்றுமில்லை என உணர்த்தத்தான் அவ்வாறு எழுதியிருக...

ஜெயமோகன் குறுநாவல்கள்

                         கிளிக்காலம்:          ஒரு விடலைச்சிறுவன் பெரியவனாகும் கதை.ஜெயமோகன் தரத்தில் இது சுமார் கதை.ஆனால் இதிலும் நல்ல விவரணை.கதை களத்தை கண்முன் காட்டும்படி விவரித்திருக்கிறார். பூமியின் முத்திரைகள்:          இது சுமாரான கதை.நண்பனின் இறப்பை ஒட்டி அவன் நினைவுகளை பகிர்ந்துள்ளார்.இதில் வரும் விவரணைகள் எதுவும் கவரவில்லை.      மடம்:         இது முழுக்க முழுக்க கிண்டல்.இதில் மடத்தின் குருவையோ , குருவிற்க்கு அடுத்ததாக வரும் பண்டாரத்தையோ கிண்டல் செய்யவில்லை.கிண்டல் முழுக்க கனபாடிகளைத்தான்.தமிழ்நாட்டில் திராவிட கழகங்கள் இல்லாத நிலையில் இக்கதை சுவாரிஸ்யமாக இருந்திருக்கும்.ஆனால் இங்கு நாளொரு மேனியும் இதே போன்ற பிரச்சாரம் இருப்பதால் இந்த கதை ஈர்ப்புடையதாக இல்லை. லங்காதகனம்:          கதையின் போக்கு முதலிலிருந்தே ஊகிக்க கூடியதாக இருந்தது.மடத்தின் விவரிப்...