எனக்கு தெரிந்த இந்திய வரலாறு என்பது 1947க்கு பின் நடந்தவை.அதற்கு முன்பான வரலாறென்பது துணுக்குச்செய்திகளாக தெரியுமே தவிர விரிவான பார்வை கிடையாது.பொதுவாக என் புரிதலென்பது 200 ஆண்டுகள் ஆங்கிலேய ஆட்சி அதற்கு முன் 800 ஆண்டுகள் முகலாயர்கள் ஆட்சி அதில் சில பெயர்கள் தவிர பெரிதாக எதுவும் தெரியாது.அவ்வப்போது படிக்கும் சில கட்டுரைகள்.இவையெல்லாம் துணுக்குச்செய்திகளாக தெரியுமே தவிர,ஒட்டுமொத்த வரலாறு தெரியாது.இந்த பின்னணியில் The Anarchy புத்தகம் 1600 முதல் 1800 வரையிலான இந்தியாவின் முழு வரலாற்றையும் விவரிக்கிறது.கிழக்கிந்திய கம்பெனி(EIC) தோன்றியதிலிருந்து அவர்கள் இந்தியாவை தங்கள் முழு கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது வரை மிகமிக விரிவாக சுவாரஸ்யமாக இந்த நூலின் ஆசிரியர் எழுதியுள்ளார்.இப்படிப்பட்ட ஒரு வரலாற்று நூல் இதற்கு முன் நான் படித்ததில்லை.
வெண்முரசு - ஜெயமோகன்
சென்னை எழும்பூரில் நடைபெற்ற வெண்முரசு முதல் நான்கு நூல் வெளியீட்டு விழாவில்(கமல்,அசோகமித்ரன் பங்கேற்ற) முதற்கனல் மற்றும் வண்ணப்பாடல் நூல்களை வாங்கினேன்.ஆனால் வாங்கியதை அப்படியே அலமாரியில் வைத்துவிட்டேன்.நான்கு ஆண்டுகள் கழித்துத்தான் படிக்க ஆரம்பித்தேன்.வெண்முரசு படிக்க ஆரம்பித்த்திலிருந்து அடுத்த இரண்டாண்டுகள் வேறு எந்த புத்தகமும் படிக்கவில்லை.தொடர்ச்சியாக 26 பாகங்களையும் படித்து முடித்தேன்.வெண்முரசை முழுமையாக படித்து முடித்ததே என்னளவில் பெரும்சாதனை.இதை எழுதிய ஜெயமோகனுக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.
Zorba the Greek - Nikos Kazantzakis
இந்த நாவல் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி என்பதைத்தான் சொல்கிறது.இந்த கதை முழுவதும் சொல்லப்படுவது ஒரு பணக்கார,புத்தகபுழுவாக , எப்போதும் தத்துவ தேடலுடன் உள்ள ஒருவர் மூலமாக சொல்லப்படுகிறது.அவர் தற்செயலாக ஃகபே ஒன்றில் ஜோர்பாவை சந்திக்கிறார்.ஜோர்பா தனக்கு நன்றாக சமைக்கத் தெரியும் என்றும் Santuri இசை கருவியை நன்றாக வாசிக்கத் தெரியும் என்றும் தனக்கு ஏதாவது வேலை கொடுத்தால் தங்களுடனே வந்துவிடுவதாகவும் கதைசொல்லியிடம் கேட்கிறார்.ஜோர்பாவின் பேச்சு ,தோற்றம் இவையெல்லாம் முதல் சந்திப்பிலேயே கதை சொல்லியை ஈர்க்கிறது.ஜோர்பாவை வேலைக்கு சேர்த்துக் கொள்கிறார்.அதற்குபின் ஜோர்பாவின் கடந்த காலம் துண்டுதுண்டாக விவரிக்கப்படுகிறது.
The Man Who Knew Infinity - Robert Kanigel
ஒருவருடைய வாழ்க்கை வரலாற்றை எப்படி எழுத வேண்டும் என்பதற்கு இந்த நூல் ஒரு சிறந்த உதாரணம்.இந்நூல் மூலம் ராமானுஜன் மேலும் G.H.Hardy மேலும் ஏற்படும் பெருமதிப்பு,வியப்பு இந்நூலாசிரியர் மேலும் ஏற்படுகிறது.காரணம் இந்நாலூக்காக அவர் செலுத்தியிருக்கும் உழைப்பு.
The Selfish Gene - Richard Dawkins
பொதுவாக நம்மிடம் ஒரு நம்பிக்கை உண்டு.அதாவது ஏலியன்கள் நம்மை விட அதி புத்திசாலிகளாக இருப்பார்கள்.ஏலியன்களையே பார்க்காமல் அவர்கள் நம்மைவிட புத்திசாலிகளாக இருப்பார்கள் என்று எவ்வாறு கூறமுடியும்.ஏனென்றால் மனிதர்களாகிய நம்மால் இதுவரை ஒரு விஷயத்தை கண்டுபிடிக்க முடியவில்லை.அதில் ஏலியன்கள் நம்மைவிட சிறந்தவர்களாக விடை தெரிந்தவர்களாக இருப்பார்கள் என நம்பப்படுகிறது.அந்த விஷயம் பூமியில் எவ்வாறு உயிர்கள் தோன்றின?இதற்கான விடை நம்மிடம் தற்போதுவரை இல்லை.நாம் கண்டுபிடித்ததெல்லாம் அனுமானங்கள்தான்(theory).திட்டவட்டமான விடை இல்லை.டார்வினின் பரிணாம வளர்ச்சிக்கொள்கைகூட ஓரு உயிரினத்திலிருந்து மற்றொரு உயிரினம் எவ்வாறு பரிணாம வளர்ச்சிப் பெற்றது என்பதைத்தான் சொல்கிறதே தவிர எவ்வாறு உயிர்கள் தோன்றின என்பதைப் பற்றி சொல்லவில்லை.
ஒற்றை வைக்கோல் புரட்சி - மசானபு ஃபுகோகோ
M. S. Subbulakshmi: The Definitive Biography - T.J.S.George
நான் இந்த புத்தகத்தை படிப்பதற்க்கான முக்கிய காரணம் இதில் எம்.எஸ்.சுப்புலட்சுமி G.N.Bக்கு எழுதிய காதல் கடிதங்கள் உள்ளன என்பதால்தான்.இதை படித்து முடித்தபோது எம்.எஸ் பற்றிய ஒரு பிம்பம் கிடைத்தது.ஏற்கனவே அவர் பற்றிய பிம்பத்தில் சிறிது மாற்றம் ஏற்ப்பட்டாலும் , எந்த சிதைவும் இல்லை.இதற்கு காரணம் சிரு வயதிலிருந்தே அவரைப்பற்றிய செய்திகளை கேட்டே வளர்ந்திருக்கிறேன்.