முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வெண்முரசு - ஜெயமோகன்

சென்னை எழும்பூரில் நடைபெற்ற வெண்முரசு முதல் நான்கு நூல் வெளியீட்டு விழாவில்(கமல்,அசோகமித்ரன் பங்கேற்ற)  முதற்கனல் மற்றும் வண்ணப்பாடல் நூல்களை வாங்கினேன்.ஆனால் வாங்கியதை அப்படியே அலமாரியில் வைத்துவிட்டேன்.நான்கு ஆண்டுகள் கழித்துத்தான் படிக்க ஆரம்பித்தேன்.வெண்முரசு   படிக்க ஆரம்பித்த்திலிருந்து அடுத்த இரண்டாண்டுகள் வேறு எந்த புத்தகமும் படிக்கவில்லை.தொடர்ச்சியாக  26 பாகங்களையும் படித்து முடித்தேன்.வெண்முரசை முழுமையாக படித்து முடித்ததே என்னளவில் பெரும்சாதனை.இதை எழுதிய ஜெயமோகனுக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.

முதற்கனலில் மானசாதேவி,அவள் மகன் ஆஸ்திகன் அவர்களுடைய வீடு, காடு என அனைத்தும் என் கண்முன் உள்ளது.முதல் பாகத்திலிருந்து இறுதி பாகம் வரை இந்த நூலில் உள்ள அனைத்து இடங்களுக்கும் ஏதோ நானே நேரில் சென்று தொட்டுப்பார்த்ததாகவே உணர்கிறேன்.அவ்வளவு வர்ணனை.துரோனரின் இளமை பருவம் முதல் அவர் ஆசிரியர் ஆகும் வரை உள்ள காலம் ,அவர் வாழ்ந்த இடத்தின் வர்ணனை இன்றும் பசுமையாக என் கண்முன் உள்ளது.அவர் இளமைபருவம் படிக்கும் போது கொஞ்சம் பரிதாபமாக இருந்தது.

வெண்முரசில் கிருஷ்ணர்(இளைய யாதவர்) எனக்கு எவ்வளவு பிடித்ததோ அதே அளவிற்க்கு கணிகரையும் பிடித்தது.இளைய யாதவர் சகுனியை பார்த்து பேசும் போது சாத்யகியையும் கூட்டிசென்று கணிகரையே பார்க்கும் படி சொல்லுமிடத்தில் சிரித்துக்கொண்டேதான் படித்து முடித்தேன்.

கங்கை  வெண்முரசு முழுவதும் வருகிறது.அதில் வரும் கப்பல்களும் படகுகளும் அவை துறைமேடை மேல் வருவதும் போவதும் , துறை மேடையில் இறங்குபவர்கள் அங்கிருக்கும் குதிரையை எடுத்து செல்வதும் எனக்கு ஒரு திரைக் காவியம் போல் கண்முன் விரிகிறது.

நாவல் முழுவதும் வரும் சூதர்கள்.அவர்கள் எப்போது வருவார்கள் முழவை எடுப்பார்கள் என்று நான் காத்துக்கொண்டிருப்பேன்.கண்டிப்பாக ஒரு கிளைக் கதை வரும் என்று தெரியும்.அவர்கள் கதை சொல்லத் தொடங்கும் போதும் கதை முடியும் போதும் உண்மையிலேயே எனக்கு முன் ஒரு சூதர் அமர்ந்திருப்பதாகவே உணர்வேன்.வெண்முரசிற்க்கு பிறகு நானே ஒரு விஷயத்தை மற்றவர்களுக்கு சொல்லிக்கொடுப்பதிலும் புரியவைப்பதிலும் பெரிய மாற்றத்தை உணர்கிறேன்.சூதர்களுக்கு நன்றி !!மூலபாரதத்தில் போருக்கு முன்  அர்ஜுனன் மட்டும்  கண்ணனிடம் அறிவுரை பெருவான்(பகவத்கீதை).ஆனால் வெண்முரசில் எமன்,கர்ணன்,பீக்ஷ்மர்,சகுனி,விதுரர் ,இன்னும் சிலர் அவரை சந்தித்து அறிவுரை பெருவார்கள்.அதில் எமன் வரும் நிகழ்ச்சி அபாரம்.

வெண்முரசை படித்ததால் நான் பெற்றுக்கொண்டவை  ஏராளம்.முதன்மையாக மகாபாரதம் முழுவதும் தெள்ளத்தெளிவாக எந்த சந்தேகமும் இல்லாமல் தெரிந்து கொண்டேன்.ஏறத்தாழ இப்படித்தான்  மகாபாரதம் நடந்திருக்கும் என்பதைப் போல மிக யதார்த்தமான கதைப்போக்கு மற்றும் கதை விவரிப்பு.இரண்டாவதாக மகாபாரத கிளைகதைகள் அனைத்தும் மிக விரிவாக அழகாக சொல்லப்பட்டுள்ளது.இதில் மகாபாரத கதையுடன் சொல்லப்படாத பிற விஷயங்களேயில்லை என்பதைப் போல சமையல்,உணவுபரிமாறல்,அரசியல்,சமையற்கலை(makeup),crowd management,ஓற்றர்,நீர்வழிப்போக்குவரத்து என அனைத்து துறைகளையும் விவரித்திருக்கிறார்.பாரதபோர் முடிவிற்கு பிறகு ஒரு புதிய நாடு எவ்வாறு உருவாகிறது அங்கு மக்கள் எவ்வாறு குடியேருகிறார்கள் என்பதை அழகாக விவரித்திருப்பார்.எனக்கு அமெரிக்காதான் ஞாபகம் வந்தது.

ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் ஆழமாக சித்தரித்து   அவர்களை psyco analysis செய்து அவர்களின் துயர்,மகிழ்ச்சி,ஆணவம்  எதனால் என்பதை அவர்களுக்குள் ஊடுருவி அந்த உணர்ச்சிகளின் வேர் காரணத்தை தொட்டுப்பார்க்கிறார் ஆசிரியர்.கண்டிப்பாக அந்த கதாபாத்திரமாக தன்னை மாற்றிக்கொண்ட ஒருவரால்தான் இப்படி எழுத சாத்தியம்.

நாவல் முழுவதும் வரும் முறைமை.எவர் ஒருவர் மற்றவரை சந்திக்கவேண்டுமென்றாலும் அவரிருக்கும் இடம்வரை வந்து முன்னனுமதி பெற்ற பின்னரே அவரை சந்திக்க இயலும்.அரண்மனை,காடு,தவகுடில் என எந்த இடமானாலும் இந்த முறைமை கடைப்பிடிக்கப்படுகிறது.

நாவலின் மற்றொரு சிறப்பு நல்லவர்,கெட்டவர் என்ற எளிய வகைப்பாடுகளே இல்லை.அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் காலமும், சூழ்நிலையும்,முந்தைய நிகழ்ச்சியின் தொடர்ச்சியுமே காரணம்.நம்மையே எடுத்துக்கொள்வோம்.நாம் நல்லவர்களா கெட்டவர்களா என்பதை நம்மால் உறுதியாக சொல்லிவிட முடியாது.நாம் செய்யும் பல செயல்கள் திட்டமிடாமல் சூழ்நிலைக்கேற்ப நாம் செய்வோம்.நம்மை பகுப்பாய்வு செய்தால் நாம் நல்லவர்களா கெட்டவர்களா என்பதை சொல்லிவிடமுடியாது.அதே போல்தான் வெண்முரசில் வரும் கதாபாத்திரங்கள்.  

வெண்முரசு போன்ற மிகப் பெரிய நாவல் வரிசைக்கு இவ்வளவு சிறிய விமர்சனம் எழுதுவது மனதிற்க்கு கொஞ்சம் கஷ்டமாகத்தான் உள்ளது.நான் வெண்முரசு படிக்க ஆரம்பித்து 5 ஆண்டுகளுக்கு மேலாகிறது.அனைத்து பாகங்களையும் படித்து முடித்தே சில பல ஆண்டுகள் ஆகின்றன.நான் படிக்க ஆரம்பித்தபோது blog திறப்பதைப் பற்றியோ அதில் நூல் விமர்சனம் எழுதுவதைப் பற்றியோ சிந்தித்ததேயில்லை.வெண்முரசு படிக்கும் போது இரண்டு  நோட்டுகள்(160 பக்கம்) முழுவதும் குறிப்புகள் எடுத்துக் கொண்டேன்.ஆனால் அவை தகவல் குறிப்புகள் மட்டுமே,விமர்சன குறிப்புகள் அல்ல.திறனாய்வு செய்யுமளவிற்க்கு மீண்டும் வெண்முரசை வாசிக்க வேண்டும் என்ற ஆவல் உண்டு. பார்க்கலாம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Crime and Punishment

                                                   ராஸ்கோல்நிகோவ் என்னும் இளைஞன் இரு கொலைகளைச் செய்கிறான்.ஏன் இந்த கொலைகளை செய்தான்?கொலைக்கு பின்னான அவன் மனப்போராட்டம் .இதையேயே மையமாக வைத்து   எழதபட்ட மிகமிக சுவார்ஸ்யமான,விருவிருப்பான நாவல்.இது வெறும் துப்பரியும் நாவல் மட்டும் இல்லை.             ராஸ்கோல்நிகோவ் ஒரு மதுபான விடுதியில் தற்செயலாக மார்மல்யாடோவை சந்திக்கிறான்.மார்மல்யாடோவ் தன் சோக கதையை ராஸ்கோல்நிகோவிடம் விவரிக்கிறார்.ஒட்டுமொத்த நாவலிலும் மிகச் சிறந்த பகுதி என்று இதைத்தான் குறிப்பிடுவேன்.மார்மல்யாடோவ் தன் முதல் மனைவி மூலம் பெற்ற மகள் சோபியா(சோனியா).பதின்ம வயது.முதல் மனைவி இறந்தவுடன் இரண்டாம் திருமணம் செய்து கொள்கிறார்.அவரின் இரண்டாம் மனைவிக்கும்(கட்ரினா இவானோவ்னா) இது இரண்டாம் திருமணம்.அவரின் முதல் திருமணம் மூலம் ஏற்கனவே மூன்று குழந்தைகள்.மூவரும் பால்ய வயதினர்.மார்மல்யாடோவ் தன் குடும்பத்த...

Sapiens: A Brief History of Humankind - Yuval Noah Harari

                     இது நான் மிகுந்த ஆவலுடன் படிக்கத் துவங்கிய நூல்.ஆனால் படித்து முடிக்கும் போது மிகுந்த ஏமாற்றத்துடன் இருந்தது.ஹராரி ஒரு பிரசாரகர்(propagandist).காலனியாதிக்கம்,முதலாளித்துவம்,மேற்கத்திய மேட்டிமைவாதம் இவைகளின் பிரசாரகர்.இந்த நூலில் எனக்கிருந்த பிரச்சனைகளை கீழே பட்டியலிடுகிறேன்.               ஆதிகாலத்தில்  மனிதன் அமெரிக்காவிற்க்கும், ஆஸ்திரேலியாவிற்க்கும் முதன்முதலில் குடியேறிய நாட்களில்  அங்கு அவர்கள் செய்ததாக சொல்லப்படும் செயல்கள் ஊகங்களே(எ.கா.பெரும்பான்மையான அரிய வகை விலங்குகளை கொன்றொழித்தது).அதற்கு எந்தவித உறுதியான ஆதாரங்களும் இல்லை.ஆனால் ஹராரி எல்லாவற்றையும் விலாவாரியாக ஏதோ நேரில் பார்த்தவர் போல்  விவரிக்கிறார்.ஏன் இவ்வாறு செய்கிறார் என்பது நூலின் பிற்பகுதியை படிக்கும் போதுதான் புரிகிறது.மேற்கத்தியர்கள் காலனியாதிக்கதின் போது அவர்கள் செய்த கொடுஞ்செயல்களை ஆதிகால பழங்குடியினர் செய்த செயல்களோடு ஒப்பிடும் போது ஒன்றுமில்லை என உணர்த்தத்தான் அவ்வாறு எழுதியிருக...

ஜெயமோகன் குறுநாவல்கள்

                         கிளிக்காலம்:          ஒரு விடலைச்சிறுவன் பெரியவனாகும் கதை.ஜெயமோகன் தரத்தில் இது சுமார் கதை.ஆனால் இதிலும் நல்ல விவரணை.கதை களத்தை கண்முன் காட்டும்படி விவரித்திருக்கிறார். பூமியின் முத்திரைகள்:          இது சுமாரான கதை.நண்பனின் இறப்பை ஒட்டி அவன் நினைவுகளை பகிர்ந்துள்ளார்.இதில் வரும் விவரணைகள் எதுவும் கவரவில்லை.      மடம்:         இது முழுக்க முழுக்க கிண்டல்.இதில் மடத்தின் குருவையோ , குருவிற்க்கு அடுத்ததாக வரும் பண்டாரத்தையோ கிண்டல் செய்யவில்லை.கிண்டல் முழுக்க கனபாடிகளைத்தான்.தமிழ்நாட்டில் திராவிட கழகங்கள் இல்லாத நிலையில் இக்கதை சுவாரிஸ்யமாக இருந்திருக்கும்.ஆனால் இங்கு நாளொரு மேனியும் இதே போன்ற பிரச்சாரம் இருப்பதால் இந்த கதை ஈர்ப்புடையதாக இல்லை. லங்காதகனம்:          கதையின் போக்கு முதலிலிருந்தே ஊகிக்க கூடியதாக இருந்தது.மடத்தின் விவரிப்...