The Last Mughal - William Dalrymple

         முதல் இந்திய சுதந்திரப்போர் என்று அழைக்கப்படும் சிப்பாய்கழகம் 1857ல் நடந்தது, பிரிட்டிஷ்ஷார் மாடு மற்றும் பன்றி கொழுப்பு தடவிய குண்டுகளை பயன்படுத்தியதால் இந்து மற்றும் முஸ்லீம் சிப்பாய்கள் புரட்சியில் ஈடுபட்டனர்.இதுவே என் புரிதல்.ஆனால் இந்த புத்தகம் படித்த பின்தான்  சிப்பாய்கழகத்திற்கான காரணங்கள் ஒன்றல்ல, பற்பல சிக்கலான காரணிகள்.இந்நூலாசிரியர் 1850கள் வாக்கில் டெல்லியில் நடந்த  அனைத்து நிகழ்வுகளையும்  விவரித்திருக்கிறார்.இந்த புத்தகத்தை படிக்கும் முன் இதே ஆசிரியர் எழுதிய The Ananarchy படித்திருந்தேன்.The Last Mughalம் அந்த நூலின் தொடர்ச்சியாகத்தான் எனக்குத் தெரிந்தது.சுருக்கமாக இந்த இரு நூல்களைப் பற்றி சொல்ல வேண்டுமென்றால் அற்புதம்,அபாரம்.

                                                
     இந்த ஆசிரியரின் சிறப்பென்பது முதலில்  அவரின் மொழிநடை.அடுத்தடுத்து நிகழ்வுகளை அடுக்கிச் சொல்லும் பாங்கு.ஒவ்வொரு நிகழ்வையும் இந்தியர்களின் பார்வையிலும் அதே நிகழ்வை ஆங்கிலேயர்களின் பார்வையிலும் சொல்லும் விதம்.நான் ஒரே ஒரு முறைதான் டெல்லி சென்றிருக்கிறேன்.ஆனால் மீண்டும் சென்றால் டெல்லியை நான் பார்க்கும் பார்வை முற்றிலும் வேறானதாக இருக்கும்.அந்தளவிற்கு டெல்லி வரலாற்றை,அதன் அழகினை விவரித்திருக்கிறார்.
     தற்போது ஹிந்துகளுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையே உள்ள ஒவ்வாமையென்பது 1857க்கு பின் சிப்பாய்கழகத்தின் தோல்விக்குப்பின் ஏற்பட்டவை.அதுவும் பிரிட்டிஷ்ஷாரால் திட்டமிட்டே உருவாக்கப்பட்டது.இதே  போன்ற  பிரசாரத்தை 9/11 தாக்குதலுக்குப் பின் அமெரிக்காவும் செய்தது.தங்களை எதிர்க்கும் எந்த காரணியையும் கொடுரமாக சித்தரிப்பதுதான் வல்லரசுகளின் எதிர்வினை போல.இந்த கோணத்தில் பார்த்தால் History Repeats.
     இந்த வரலாற்றிலேயே மிக சோகமான பகுதி Zafarன் துணைவியர் பற்றியதுதான்.அரண்மனையில் இராணியாக வாழ்ந்தவர்கள் கடைசியில் நாடு கடத்தப்பட்டு சிறையில் அடிமை வாழ்கையில் முடித்திருக்கிறார்கள்.
     இந்த கழகம் தோல்வியில் முடிந்த்தற்க்கு முக்கிய காரணம் ஆங்கிலேயர்களின் படை வல்லமை.அதை தவிர முக்கிய காரணம் அரண்மனையிலேயே நடந்த உள்ளடி வேலைகள் மற்றும் Zafarன் ஊசலாட்டம்(osilating mind).சிப்பாய்கழகத்தின் தரப்பில் போரிட்டவர்களின்  தெளிவின்மை(ஏன் போரிடுகிறோம்).இரண்டாம் உலகப்போருக்குப் பின் காலணியாதிக்கதை இனி தொடரமுடியாது என்பதை புரிந்து கொண்டு எப்படி ஆங்கிலேயர்கள் வெளியேறினார்களோ, அந்த புரிதல் முகலாயர்களிடம் இல்லாததுதான் அவர்களின் அந்த சோகமான முடிவிற்க்கு காரணம்.ஆனால் ஒன்று சிப்பாய்கழகம் வெற்றி பெற்று ஆங்கிலேயர்கள் தோல்வியடைந்திருந்தால் இன்றைய இந்தியா கிடைத்திருக்குமா என்பது சந்தேகம். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக