முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சலம் - பா.ராகவன்

                 



        இந்த நாவல் அதர்வண வேத காலத்தில் நடக்கும் கதை.நாவலின் பின் அட்டையில் சொல்லியபடி இது ஒரு முன்னுதாரணம் அற்ற நாவல்.சரஸ்வதி நதி எவ்வாறு மறைந்திருக்கும் என்பதை விவரிக்கும் ஒரு மாய யதார்த்த நாவல்.

        அதர்வன்,குத்சன்(சுத்திர முனி),சாரன்,விண்ணுலா,காமாயனி- இவர்கள் தான் முக்கிய கதாபாத்திரங்கள்.அதர்வ மஹரிஷி தன் ஆசிரமத்தில் பல்வேறு தரப்பட்ட மாணாக்கர்களுக்கு பாடம் கற்பிக்கிறார்.ஆனால் குத்சனை மட்டும் தவிர்க்கிறார்.குத்சனை முனி என்றும் அங்கீகரிக்கிறார்.குத்சன் அதர்வன் மேல் பெருமதிப்பு வைத்திருந்தாலும் ,தன்னை சீடனாக ஏற்க மறுப்பதால் அதர்வன் மேல் கோபம் கொள்கிறார்.ஒரு கட்டத்தில் ஒருவர் மேல் மற்றொருவர் மாறி மாறி சாபம் கொள்கிறார்கள்.இயற்கை ரிதனின் படி அதர்வன் பிறப்பும் இறப்பும் அற்றவன்.ஆனால் குத்சனின் சாபம் அதை குலைக்கிறது.குத்சனின் சாபத்தை நிறைவேற்ற பைசாச குலத்தைச் சேர்ந்த சாரன் வருகிறான்.கடைசியில் சாரன் எவ்வாறு அதர்வனை கொல்கிறான்,சரஸ்வதி நதி எவ்வாறு மறைகிறது என்பதே நாவலின் கதை.

        நாவல் பெரும்பாலும் சுவாரஸ்யமாகவே பயணிக்கிறது.ஆசிரியரின்(பா.ரா) மொழிநடை,மேற்கோள் காட்டும் படியான வசீகரமான வரிகள் நாவலை தங்கு தடையின்றி வாசிக்க வைக்கின்றன.நாவலின் தொடக்கம் அட்டகாசம்.எவ்வாறு சாரன் அதர்வனை கொல்லுவான் என்ற எதிர்பார்ப்பு நாவல் இறுதிவரை உண்டு.

        நாவலின் விமர்சனமாக நான் பார்ப்பது இந்த நாவல் ஒரு நேர்கோட்டில் பயணிக்காமல் flashbackகிலேயே பெரும்பாலும் விவரிக்கப்படுகிறது.வேதகாலத்தில் நடக்கும் சாதிப்பிரச்சனை ஏதோ தற்கால தமிழ் சினிமாவில் காட்டுவதைப் போலவே இந்த நாவலிலும் வருகிறது.சாரன் முதல் முறை அதர்வனின் அபூர்வ சக்திகளை கண்டு வியப்பதோடல்லாமல் ஒவ்வொரு முறையும் வியக்கும் படி காட்டியிருப்பது கொஞ்சம் சலிப்பை ஏற்படுத்துகிறது.

        சலம் புதிய கதைகளத்துடன் புதிய நடையில் வாசகர்களுக்கு ஒரு புதிய வாசிப்பனுபவத்தை தருகிறது.ஆசிரியருக்கு என் வணக்கங்கள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Crime and Punishment

                                                   ராஸ்கோல்நிகோவ் என்னும் இளைஞன் இரு கொலைகளைச் செய்கிறான்.ஏன் இந்த கொலைகளை செய்தான்?கொலைக்கு பின்னான அவன் மனப்போராட்டம் .இதையேயே மையமாக வைத்து   எழதபட்ட மிகமிக சுவார்ஸ்யமான,விருவிருப்பான நாவல்.இது வெறும் துப்பரியும் நாவல் மட்டும் இல்லை.             ராஸ்கோல்நிகோவ் ஒரு மதுபான விடுதியில் தற்செயலாக மார்மல்யாடோவை சந்திக்கிறான்.மார்மல்யாடோவ் தன் சோக கதையை ராஸ்கோல்நிகோவிடம் விவரிக்கிறார்.ஒட்டுமொத்த நாவலிலும் மிகச் சிறந்த பகுதி என்று இதைத்தான் குறிப்பிடுவேன்.மார்மல்யாடோவ் தன் முதல் மனைவி மூலம் பெற்ற மகள் சோபியா(சோனியா).பதின்ம வயது.முதல் மனைவி இறந்தவுடன் இரண்டாம் திருமணம் செய்து கொள்கிறார்.அவரின் இரண்டாம் மனைவிக்கும்(கட்ரினா இவானோவ்னா) இது இரண்டாம் திருமணம்.அவரின் முதல் திருமணம் மூலம் ஏற்கனவே மூன்று குழந்தைகள்.மூவரும் பால்ய வயதினர்.மார்மல்யாடோவ் தன் குடும்பத்த...

Sapiens: A Brief History of Humankind - Yuval Noah Harari

                     இது நான் மிகுந்த ஆவலுடன் படிக்கத் துவங்கிய நூல்.ஆனால் படித்து முடிக்கும் போது மிகுந்த ஏமாற்றத்துடன் இருந்தது.ஹராரி ஒரு பிரசாரகர்(propagandist).காலனியாதிக்கம்,முதலாளித்துவம்,மேற்கத்திய மேட்டிமைவாதம் இவைகளின் பிரசாரகர்.இந்த நூலில் எனக்கிருந்த பிரச்சனைகளை கீழே பட்டியலிடுகிறேன்.               ஆதிகாலத்தில்  மனிதன் அமெரிக்காவிற்க்கும், ஆஸ்திரேலியாவிற்க்கும் முதன்முதலில் குடியேறிய நாட்களில்  அங்கு அவர்கள் செய்ததாக சொல்லப்படும் செயல்கள் ஊகங்களே(எ.கா.பெரும்பான்மையான அரிய வகை விலங்குகளை கொன்றொழித்தது).அதற்கு எந்தவித உறுதியான ஆதாரங்களும் இல்லை.ஆனால் ஹராரி எல்லாவற்றையும் விலாவாரியாக ஏதோ நேரில் பார்த்தவர் போல்  விவரிக்கிறார்.ஏன் இவ்வாறு செய்கிறார் என்பது நூலின் பிற்பகுதியை படிக்கும் போதுதான் புரிகிறது.மேற்கத்தியர்கள் காலனியாதிக்கதின் போது அவர்கள் செய்த கொடுஞ்செயல்களை ஆதிகால பழங்குடியினர் செய்த செயல்களோடு ஒப்பிடும் போது ஒன்றுமில்லை என உணர்த்தத்தான் அவ்வாறு எழுதியிருக...

ஜெயமோகன் குறுநாவல்கள்

                         கிளிக்காலம்:          ஒரு விடலைச்சிறுவன் பெரியவனாகும் கதை.ஜெயமோகன் தரத்தில் இது சுமார் கதை.ஆனால் இதிலும் நல்ல விவரணை.கதை களத்தை கண்முன் காட்டும்படி விவரித்திருக்கிறார். பூமியின் முத்திரைகள்:          இது சுமாரான கதை.நண்பனின் இறப்பை ஒட்டி அவன் நினைவுகளை பகிர்ந்துள்ளார்.இதில் வரும் விவரணைகள் எதுவும் கவரவில்லை.      மடம்:         இது முழுக்க முழுக்க கிண்டல்.இதில் மடத்தின் குருவையோ , குருவிற்க்கு அடுத்ததாக வரும் பண்டாரத்தையோ கிண்டல் செய்யவில்லை.கிண்டல் முழுக்க கனபாடிகளைத்தான்.தமிழ்நாட்டில் திராவிட கழகங்கள் இல்லாத நிலையில் இக்கதை சுவாரிஸ்யமாக இருந்திருக்கும்.ஆனால் இங்கு நாளொரு மேனியும் இதே போன்ற பிரச்சாரம் இருப்பதால் இந்த கதை ஈர்ப்புடையதாக இல்லை. லங்காதகனம்:          கதையின் போக்கு முதலிலிருந்தே ஊகிக்க கூடியதாக இருந்தது.மடத்தின் விவரிப்...