ஒழுக்கமில்லாத தந்தை, அவரது மூன்று மகன்கள்.மூவரும் வெவ்வேறு விதமான வளர்ப்பு முறைகள்,சித்தாந்தங்கள்,நம்பிக்கைகள் கொண்டவர்கள்.இவர்களை மையமாக வைத்தே இறைநம்பிக்கை(faith),துன்பப்படுதல்(suffer),மன உளைச்சல் பற்றி ஆராயும் மிக நீண்ட நாவல்.
இந்த நாவல் இறைநம்பிக்கை,வாழ்வியல் அறங்களை அழுத்தமாக பதிவு செய்கிறது.அறிவியல் மற்றும் நவீன அற மதிப்பீடுகளை கேள்விக்குட்படுத்துகிறது.கொஞ்சம் பழமைவாதத்தை பேசும் நாவல் என்பதுபோல் தோன்றினாலும் அவை விமர்சனமும் செய்யப்படுகின்றன.சொல்லவரும் விஷயத்தை ஆழமாக அலசுகிறார்.பல இடங்களில் இதில் வரும் போதனைகள் cringeஆக இருந்தாலும் சுவாரஸ்யமான நாவல்.
முதலில் தந்தை பல தவறுகளைச் செய்கிறார்.அதில் ஒன்று லிசாவிட்டா என்ற பெண்மணியை வன்புணர்வு செய்கிறார்.அவருக்கு பிறக்கும் மகன் தான் Smerdyakov.இது வெளிப்படையாக சொல்லப்படவில்லை.அவன் நன்றாக படித்து பெரியவனானாலும் ,தன் பிறப்பு பற்றிய தாழ்வு மனப்பான்மை அந்த மகனை வாட்டுகிறது.கூடவே அவனுக்கு வலிப்பு நோயும் அடிக்கடி வருகிறது.அவன் தான் தந்தையை கொலை செய்கிறான்.ஆனால் அதற்கு முன்பே அவனிடம் சிக்கலான மனநிலை உள்ளது.ஒருமுறை Ilyusha என்ற சிறுவனிடம் குண்டூசி குத்திய ரொட்டித்துண்டை நாய்க்கு உணவாக தருமாறு சொல்கிறான்.அந்த சிறுவனும் அவ்வாறே செய்கிறான்.அந்த நாய் அதை சாப்பிட்டவுடன் துடிதுடித்து ஓடுகிறது.அது இறந்துவிட்டதா அல்லது பிழைத்துவிட்டதா என்பது தெரியவில்லை.ஆனால் அந்த சிறுவன் இச்செயலினால் மனக்குழப்பம் அடைகிறான்.வேரோரு சந்தர்ப்பதில் Mitya karamazov அவனது தந்தையை சாலையில் எல்லோர் முன்னிலையிலும் அடித்து துவைப்பதை நேரில் பார்க்கிறான்.அவன் நாய்க்கு செய்த பாவத்திற்கு அவனது தந்தை அடிவாங்குவதை நேரில் காணும் அவலம் அவனுக்கு ஏற்படுகிறது.அந்த மன உளைச்சலில் அவன் இறக்கிறான்.Mitya karamazov அந்த சிறுவனின் தந்தையை அடித்த பாவத்திற்கு தண்டனையாக தான் செய்யாத கொலை குற்றத்திற்காக தண்டனை பெற்று சிறைபடுகிறான்.தந்தை karamazov தான் செய்யும் எல்லா பாவத்திற்க்கும் தண்டனையாக கொலை செய்யப்படுகிறார்.கொலையுண்ட தந்தை karamazov மேல் எந்த பச்சாதாபமும் நமக்கு வருவதில்லை.அவரை உண்மையிலேயே கொலை செய்த Smerdyakov மன உளைச்சலில் தற்கொலை செய்து கொள்கிறான்.இவையனைத்துமே ஒரு சுழற்சி போல் தோன்றுகிறது.
இந்த நாவலின் நாயகனாக, உதாரண மனிதனாக Alexei karamazov காட்டப்படுகிறார்.நற்குணங்களின் உறைவிடம்.இவரது இரண்டாம் அண்ணன் Ivan karamazov மெத்த படித்த நவீன சிந்தனையாளன்.ஆனால் அந்த நவீன சிந்தனையின் விளைவாக தனது தந்தையின் கொலைக்கு ஏதோ ஒரு விதத்தில் உடந்தையாக சித்தரிக்கப்படுகிறார்.அவரும் மன உளைச்சலுக்கு ஆளாகிறார்.இறைநம்பிக்கை ஒன்றுதான் நல்வழியில் செல்ல ஒரே வழி என்பதான ஒரு சித்தரிப்பு.
Alexei karamazovவின் குரு Father Zosima.இவரின் கதாபாத்திரம் மூலம் தான் இறைநம்பிக்கை தொடர்பான தத்துவ விவாதங்கள் விளக்கப்படுகின்றன.ஒருவர் கொலை குற்றம் போன்ற பெரிய பாவங்களை யாருக்கும் தெரியாமல் செய்கிறார்.அதன் பின் அந்த குற்ற உணர்விலேயே வாழ்கிறார்.எவ்வளவோ காலம் கடந்த பின்பும் எப்போது தன் குற்றத்தை வெளிப்படையாக ஒப்புக்கொள்கிறாறோ அப்போதே அவர் மீட்சியடைகிறார்.இதைதான் அந்த விவாதங்களின் சாரமாக கருதுகிறேன்.இது எனக்கு சரியா தவறா என்று உறுதியாக தெரியவில்லை.ஆசிரியர் இந்த கதாபாத்திரம் மூலம் அப்போதைய ரஷ்யாவின் நிலையை விளக்குகிறார்.ரஷ்யாவில் உயர் வர்க்கதினர் அறிவியல்பால் ஈர்க்கப்பட்டு இறை நம்பிக்கையை அறவே விட்டுவிட்டனர்.எளிய மனிதர்களிடம்தான் இன்னும் ஓரளவிற்க்கு இறை நம்பிக்கை உள்ளது.அவர்களிடமிருந்துதான் ரஷ்யாவின் மறுமலர்ச்சி ஏற்படும்.இதே மாதிரியான எளிய மனிதர்களைப் பற்றிய பார்வையில் தான் ஜெயமோகனின் பல நாவல்களில் சித்தரிக்கப்பட்டிருக்கும்.
இந்த நாவல் மட்டுமல்ல , மற்ற ஐரோப்பிய நாவல்களை படிக்கும் போதும் ஒன்று தெளிவாகிறது.மனித உறவுகள்,சமூக மதிப்பீடுகள், சமூக பிரச்சனைகள் எல்லா நாட்டிற்கும் ஓரே மாதிரியாகத்தான் உள்ளது.எதுவும் அன்னியமாக தெரியவில்லை.மாறாக ,ஒரு Hollywood திரைப்படம்கூட இந்த உணர்வை ஏற்படுத்துவதில்லை.
கடைசியில் நீதிமன்ற விவரிப்புகள் அனைத்தும் அற்புதம்.கடைசிவரை நாவலின் கதைசொல்லி யாரென்றே தெரியவில்லை.ஆயிரம் பக்கங்கள் கொண்ட இந்த நாவலில் பற்பல கதாபாத்திரங்கள்,பல நுண்ணிய விவரிப்புகள்.பல இடங்களில் நீண்ட தத்துவ விவாதங்கள் கொஞ்சம் சலிப்பை ஏற்படுத்தினாலும், சுவாரஸ்யமான நாவல்.
கருத்துகள்
கருத்துரையிடுக