முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஜெயமோகன் குறுநாவல்கள்

                      

கிளிக்காலம்:
        ஒரு விடலைச்சிறுவன் பெரியவனாகும் கதை.ஜெயமோகன் தரத்தில் இது சுமார் கதை.ஆனால் இதிலும் நல்ல விவரணை.கதை களத்தை கண்முன் காட்டும்படி விவரித்திருக்கிறார்.

பூமியின் முத்திரைகள்:
        இது சுமாரான கதை.நண்பனின் இறப்பை ஒட்டி அவன் நினைவுகளை பகிர்ந்துள்ளார்.இதில் வரும் விவரணைகள் எதுவும் கவரவில்லை.
    
மடம்:
        இது முழுக்க முழுக்க கிண்டல்.இதில் மடத்தின் குருவையோ , குருவிற்க்கு அடுத்ததாக வரும் பண்டாரத்தையோ கிண்டல் செய்யவில்லை.கிண்டல் முழுக்க கனபாடிகளைத்தான்.தமிழ்நாட்டில் திராவிட கழகங்கள் இல்லாத நிலையில் இக்கதை சுவாரிஸ்யமாக இருந்திருக்கும்.ஆனால் இங்கு நாளொரு மேனியும் இதே போன்ற பிரச்சாரம் இருப்பதால் இந்த கதை ஈர்ப்புடையதாக இல்லை.

லங்காதகனம்:
        கதையின் போக்கு முதலிலிருந்தே ஊகிக்க கூடியதாக இருந்தது.மடத்தின் விவரிப்பு நன்று.நிறைய குறியீடுகள்.ஆசானை அனைவரும் ஏளனம் செய்யும் போது, கதை சொல்லி மட்டும் அவரை அனுதாபத்துடன் அணுகுகிறார்.அதேபோல் ஆசானுக்கும் கதைசொல்லி மேல் சற்றுப் பிரியம்.ஆசான் ஹனுமன் உபாசகர்.கதை சொல்லியின் பெயர் இராமன்.என்னதான் ஆசான் இறுதியில் கலையுச்சம் அடைந்து வேடம் தரித்த மூர்த்தியாகவே மாறும் விதத்தில் சித்தரிக்கப்பட்டிருந்தாலும் ,மற்ற நேரங்களில் ஆசான் மடத்தில் நடத்தப்படும் விதம் இயல்பாக இல்லாமல் வலியப் புனையப்பட்டுள்ளது போல் உள்ளது.

அம்மன்மரம்:
        இந்த கதை எனக்கு பிடித்திருந்தது.ஒரு வரலாற்று நிகழ்வை விவரித்து அதன் தொடர்ச்சியாக எப்படி இப்பொழுதும் அக்குடும்ப பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை காட்டியிருப்பார்.

நிழல்:
        இந்த கதை அமானுஷ்ய நடையில் எழுதப்பட்டிருந்தாலும் இது அது அல்ல.ஒரு ஆணவக் கொலை. அதை எதிர்க்கும் பெண்ணை பேயோட்டுதல் என்ற பெயரில் அவள் மேல் விழும் அடி.மற்ற கதைகளில் பிள்ளை,நாயர்,கனபாடிகள் என்று வெளிப்படையாக சொல்லப்படும் சாதி,இதில் வெளிப்படையாக இல்லை.

டார்த்தினீயம்:
        இந்த தொகுப்பின் ஆகச்சிறந்த கதை இதுதான்.இந்த கதையின் குறியீடு எதுவாகவும் இருக்கமுடியம்(எ.கா.தீதும் நன்றும் பிறர்தர வாரா).இல்லை,என்னால் குறியீடே கண்டுபிடிக்கமுடியவில்லை என்பவர்களுக்கும் பிடிக்கும் கதை.ஜெயமோகனின் பின்னாளைய விஷ்வரூபத்திற்கான  ஆரம்ப அறிகுறிகள் தெரியத் தொடங்கிய கதையாக இந்த கதை எழுதப்பட்ட காலத்தில் இருந்திருக்கும்.

பத்ம வியூகம்:
        மஹாபாரதத்தில் அபிமன்யு இறப்பிற்க்குப் பின் சுபத்ரையின் வேதனையையும் அவன் விண்ணுலகு செல்லும்முன் அவனுக்கு எப்படியாவது பத்ம வியூகத்திலிருந்து வெளியேறும் வழியை அறியச்செய்ய வேண்டும் ,அதனால் அடுத்த பிறவியில் அவன் அந்த சூழ்ச்சியிலிருந்து தப்பிக்க வேண்டும் என்ற அவளின் பரிதவிப்பும் அழகாக விவரித்திருக்கிறார்.கிட்டதட்ட அனைத்து கதைமாந்தர்களும் இதே வடிவிலேயே வெண்முரசிலும் புனையப்பட்டுள்ளனர்.குறிப்பாக கிருஷ்ணர்.

இறுதி விஷம்:
        மஹாபாரத கதையின் தொடக்கத்தில் ஆஸ்திகன் வந்து ஐனமேஜயன் யாகத்தை தடுத்து நிறுத்தும் கதை.வெண்முரசின் முதற்கனல் நாவல் தொடங்குவதே ஆஸ்திகன் மற்றும் அவன் அன்னை மானசாதேவியிலிருந்துதான்.அதில் மிகமிக அழகான விவரனைகளுடன் அமைந்திருக்கும்.மேற்கூறிய இரு கதைகளும் ஜெயமோகன் வெண்முரசு எழுதுவதற்கான வெள்ளோட்டமாகவே தெரிகிறது.   

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Crime and Punishment

                                                   ராஸ்கோல்நிகோவ் என்னும் இளைஞன் இரு கொலைகளைச் செய்கிறான்.ஏன் இந்த கொலைகளை செய்தான்?கொலைக்கு பின்னான அவன் மனப்போராட்டம் .இதையேயே மையமாக வைத்து   எழதபட்ட மிகமிக சுவார்ஸ்யமான,விருவிருப்பான நாவல்.இது வெறும் துப்பரியும் நாவல் மட்டும் இல்லை.             ராஸ்கோல்நிகோவ் ஒரு மதுபான விடுதியில் தற்செயலாக மார்மல்யாடோவை சந்திக்கிறான்.மார்மல்யாடோவ் தன் சோக கதையை ராஸ்கோல்நிகோவிடம் விவரிக்கிறார்.ஒட்டுமொத்த நாவலிலும் மிகச் சிறந்த பகுதி என்று இதைத்தான் குறிப்பிடுவேன்.மார்மல்யாடோவ் தன் முதல் மனைவி மூலம் பெற்ற மகள் சோபியா(சோனியா).பதின்ம வயது.முதல் மனைவி இறந்தவுடன் இரண்டாம் திருமணம் செய்து கொள்கிறார்.அவரின் இரண்டாம் மனைவிக்கும்(கட்ரினா இவானோவ்னா) இது இரண்டாம் திருமணம்.அவரின் முதல் திருமணம் மூலம் ஏற்கனவே மூன்று குழந்தைகள்.மூவரும் பால்ய வயதினர்.மார்மல்யாடோவ் தன் குடும்பத்த...

Sapiens: A Brief History of Humankind - Yuval Noah Harari

                     இது நான் மிகுந்த ஆவலுடன் படிக்கத் துவங்கிய நூல்.ஆனால் படித்து முடிக்கும் போது மிகுந்த ஏமாற்றத்துடன் இருந்தது.ஹராரி ஒரு பிரசாரகர்(propagandist).காலனியாதிக்கம்,முதலாளித்துவம்,மேற்கத்திய மேட்டிமைவாதம் இவைகளின் பிரசாரகர்.இந்த நூலில் எனக்கிருந்த பிரச்சனைகளை கீழே பட்டியலிடுகிறேன்.               ஆதிகாலத்தில்  மனிதன் அமெரிக்காவிற்க்கும், ஆஸ்திரேலியாவிற்க்கும் முதன்முதலில் குடியேறிய நாட்களில்  அங்கு அவர்கள் செய்ததாக சொல்லப்படும் செயல்கள் ஊகங்களே(எ.கா.பெரும்பான்மையான அரிய வகை விலங்குகளை கொன்றொழித்தது).அதற்கு எந்தவித உறுதியான ஆதாரங்களும் இல்லை.ஆனால் ஹராரி எல்லாவற்றையும் விலாவாரியாக ஏதோ நேரில் பார்த்தவர் போல்  விவரிக்கிறார்.ஏன் இவ்வாறு செய்கிறார் என்பது நூலின் பிற்பகுதியை படிக்கும் போதுதான் புரிகிறது.மேற்கத்தியர்கள் காலனியாதிக்கதின் போது அவர்கள் செய்த கொடுஞ்செயல்களை ஆதிகால பழங்குடியினர் செய்த செயல்களோடு ஒப்பிடும் போது ஒன்றுமில்லை என உணர்த்தத்தான் அவ்வாறு எழுதியிருக...