ராஸ்கோல்நிகோவ் என்னும் இளைஞன் இரு கொலைகளைச் செய்கிறான்.ஏன் இந்த கொலைகளை செய்தான்?கொலைக்கு பின்னான அவன் மனப்போராட்டம் .இதையேயே மையமாக வைத்து எழதபட்ட மிகமிக சுவார்ஸ்யமான,விருவிருப்பான நாவல்.இது வெறும் துப்பரியும் நாவல் மட்டும் இல்லை.
ராஸ்கோல்நிகோவ் ஒரு மதுபான விடுதியில் தற்செயலாக மார்மல்யாடோவை சந்திக்கிறான்.மார்மல்யாடோவ் தன் சோக கதையை ராஸ்கோல்நிகோவிடம் விவரிக்கிறார்.ஒட்டுமொத்த நாவலிலும் மிகச் சிறந்த பகுதி என்று இதைத்தான் குறிப்பிடுவேன்.மார்மல்யாடோவ் தன் முதல் மனைவி மூலம் பெற்ற மகள் சோபியா(சோனியா).பதின்ம வயது.முதல் மனைவி இறந்தவுடன் இரண்டாம் திருமணம் செய்து கொள்கிறார்.அவரின் இரண்டாம் மனைவிக்கும்(கட்ரினா இவானோவ்னா) இது இரண்டாம் திருமணம்.அவரின் முதல் திருமணம் மூலம் ஏற்கனவே மூன்று குழந்தைகள்.மூவரும் பால்ய வயதினர்.மார்மல்யாடோவ் தன் குடும்பத்தை நேசித்தாலும் குடும்ப வருமானத்திற்க்கு அவர் எந்த வேலையிலும் தொடரவில்லை.எப்பொழுதும் குடி.அதனால் குடும்பம் வருமையில் வாடுகிறது.ஒரு கட்டத்தில் குடும்பத்தை காப்பாற்ற சோபியா தன்னையே விற்று குடும்பத்தை காக்கிறார்.
சோபியாவுக்கும் அவர் சித்திக்கும்மான உறவு அழகாக சித்தரிக்கப்பட்டுள்ளது.அதில் மிகையான பாசப்பிணைப்போ அல்லது மிகை தூற்றலோ இல்லை.சித்திக்கு தன் கையரு நிலையில் மூன்று சிறு குழந்தைகளை காப்பாற்ற செய்வதரியாது இருக்கும் நிலையில் சோபியாவின் செயல் அவள் மேல் பரிதாபமும் அன்பும் கூடுகிறது.இதில் எந்த கதாபாத்திரமும் மிகையாக சித்தரிக்கப்படவில்லை.மொத்த நாவலிலும் சோபியா வரும் இடங்கள் குறைவு.அவர் பேசுவதும் குறைவு.ஆனால் அழுத்தமான பிம்பமாக வாசகர் மனதில் பதிகிறார்.ஆனாலும் எனக்கு பிடித்தமான கதாபாத்திரம் சோபியாவின் சித்திதான்.குடும்பம் இப்படியிருக்க மார்மல்யாடோவ் ஏன் ஒரு வேலையில் நிரந்தரமாக இல்லாமல் குடித்துகொண்டே இருந்தார்?அது அப்படித்தான், விளக்கமுடியாது.நம் வாழ்கையில் இதே போல் நிறைய பேரைப் பார்த்திருப்போம்.
அடுத்ததாக அவனுக்கு ஒரு கடிதம் வருகிறது.அதை எழுதியது அவன் அம்மா.இந்த நாவலின் எனக்குப் பிடித்த இரண்டாவது சிறந்த பகுதி என்றால் இந்த கடிதத்தைதான் குறிப்பிடுவேன்.நிறைய செய்திகளை இந்த கடிதத்தின் மூலமே தெரிவிக்கிறார்.இவையாவும் வாசகருக்கு கதையை சொல்லும் விதமாக இல்லை.ஒரு தாய் தன் மகனுக்கு வாஞ்சையுடன் எழுதும் கடிதம்.அதேசமயம் ஊரில் நடக்கும் விஷயங்களையும் தெரியப்படுத்துகிறார்.மேலும் அந்த கடிதமே தன் அளவில் ஒரு சிறந்த சிறுகதைப் போல்தான் உள்ளது.
ராஸ்கோல்நிகோவ் ஏன் கொலை செய்தான்?ராஸ்கோல்நிகோவ் கல்லூரியில் படிக்கும் போது ஒரு கட்டுரை எழுதுகிறான்.அந்த கட்டுரையின் சாரம் இது தான்.மனிதர்கள் இரு வகை.முதல் வகையினர் மனித இனத்தை வழி நடத்துபவர்கள்.இரண்டாம் வகையினர் முதல் வகையினர் காட்டிய வழியில் நடப்பவர்கள்.இரண்டாம் வகையினருக்கான நியாய அநியாயகங்கள்,அற மதிப்பீடுகள் முதல் வகையினருக்கு பொருந்தாது.இதற்கு உதாரணமாக நெப்போலியனை குறிப்பிடுகிறார்.அவன் தன் பரந்து விரிந்த சாம்ராஜ்யத்தை அமைக்க போரில் அவன் செய்யும் கொலைகள் சாதாரண மனிதர்கள் செய்யும் கொலைகளின் அற மதிப்பீட்டில் சேராது.(இதே அல்ல,ஆனால் இதே போன்ற விஷயத்தைதான் ஜெயமோகன் விதி சமைப்பவர்கள் என்ற நூலிலும் சொல்லியிருப்பார்.)
என் புரிதல் ராஸ்கோல்நிகோவ் இரண்டுங்கெட்டான் நிலையில் இருந்திருக்கிறார்.முதல் வகையினராக நினைத்து துணிந்து இரு கொலைகளை செய்துவிடுகிறார்.ஆனால் இரண்டாம் வகையினருக்கான அறச்சிக்கலிலிருந்து விடுபடமுடியவில்லை.கடைசி வரையில் அந்த இரு பெண்களை கொலை செய்ததுற்க்கு அவருக்கு வருத்தமில்லை.ஆனாலும் ஏதோ சங்கடம்.ஏதோ பாவம் செய்துவிட்டதான ஒரு வித குற்ற உணர்வு.வட்டிக்கு கடன் கொடுக்கும் பெண்மணியை மட்டும் கொலை செய்திருந்தால், அவர் இவ்வளவு உளவியல் பிரச்சினைகளுக்கு ஆளாகியிருக்க மாட்டார்.ஆனால் அவர் தங்கையையும் கொலை செய்கிறார்.அதுதான் அவரை உருத்தியிருக்கும்.அதனால் சோபியாவிடம் ஆறுதல் தேடுகிறார்.சோபியாவும் தன் குடும்பத்தை காப்பாற்ற ஒரு பாவத்தை செய்கிறார்.இதிலிருந்து விடுபட(மீட்பு) அவர் சொல்லும் உபாயம் துன்பப்படுதல்(suffer).இது தான் இந்த நாவலின் முக்கியமான செய்தி என்று கருதுகிறேன்.நாவலின் இறுதியில் ராஸ்கோல்நிகோவ் தன் குற்றத்தை ஒப்புகொண்டு சைபீரியாவில் சிறைக்குச் செல்கிறார்.சிறையில் இல்லாவிட்டாலும் சோபியாவும் சைபீரியா சென்று தன்க்குத்தானே தண்டனையை அனுபவிக்கிறார்.
நாவலில் ஒரு கதாபாத்திரம் கம்யுனிசம் பேசுபவராக வருவார்.அவர் நல்லவராக காட்டப்பட்டாலும் அவர் மேல் ஒரு கிண்டல் தொனி இருந்து கொண்டேயிருக்கும்.இரஷ்ய புரட்சி நடப்பதற்க்கு ஐம்பது ஆண்டுகள் முன்னமேயே இந்த நாவல் எழுதப்பட்டுள்ளது.அப்பொழுதே கம்யூனிச சிந்தனை அங்கு பரவலாக இருந்துள்ளது இந்த கதாபாத்திரம் மூலம் தெரிகிறது.
என்னதான் மானுட அறத்தைப் பற்றி பேசியிருந்தாலும், மனித மனதின் உளவியல் சிக்கல்களைப் ஆராய்ந்திருந்தாலும் தஸ்தாவெஸ்கிக்கு மனதில் கசப்பும் மண்டிக்கிடக்கிறது.அவரின் யூதர்களைப் பற்றிய சித்தரிப்பென்பது அருவருப்பானது.ஒரு இடத்தில் இவ்வாறு எழுதியுள்ளார் "Peevish dejection which is sourly printed on all faces of J*** without exception).இதில் பிரச்சனை என்னவென்றால் எழுத்துழுக ஜாம்பவான் தஸ்தாவெஸ்கியே இவ்வாறு எழுதும் போது மற்றவர்களும் இதேப் போல் எந்த சமுதாயத்தையும் பொதுமைப்படுத்தி எழுதுவதில் தயங்கமாட்டார்கள்.
நாவலில் நிறைய கதாபாத்திரங்கள்.அனைவருமே கச்சிதமாக சித்தரிக்கப்பட்டுள்ளனர்.செயின்ட் பீட்ஸ்பர்க் நகரின் விவரிப்பு பிரமாதம்.நாவலை படித்து முடித்தவுடன் எனக்கு எற்பட்ட எண்ணம் இரஷ்ய சமுதாயத்தின் சமூக மதிப்பீடுகள்,குடும்ப உறவுகள் அனைத்தும் நம்மைப் போல்தான் உள்ளது.பெரிய வேருபாடில்லை.
இந்த நாவல் வெரும் கொலை மற்றும் கொலை விசாரணை என்ற அளவில் இல்லை.ஆழமான உளவியல் மற்றும் தத்துவ விசாரனை கொண்டது.ஒவ்வொரு அத்தியாயமும் படு சுவாரிஷ்யமாக ஒரு suspenseவுடன் முடிகிறது.மொத்தத்தில் ஒரு செவ்வியல் நாவலை படித்த த்ருப்தி ஏற்படுகிறது.
கருத்துகள்
கருத்துரையிடுக