முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Tiananmen Square: The Making of a Protest - Vijay Gokhale

              


 

        சீனாவைப் பற்றி நான் படித்த முதல் புத்தகம் 'Three Daughters of China" by Jung Chang.இந்நூல் ஆசிரியர் தன் பாட்டி,அம்மா மற்றும் தன்னுடைய வாழ்கை வரலாற்றின் வழியாக சீனாவின் அந்தந்த காலகட்டத்து சூழ்நிலையை அழகாக பதிவு செய்கிறார்.கடந்த நூறாண்டு சீனாவைப் பற்றி தெரிந்துகொள்ள இந்த புத்தகம் நல்ல ஆரம்பம்.இரண்டாவது பத்தகம் 'விலகும் திரை' by பல்லவி ஐயர்.இந்த புத்தகம் இருபத்தொன்றாம் நூற்றாண்டின் சீனாவைப் பற்றியது.

            சமீபத்தில் நான் படித்த பத்தகம் 'The Tinanmen Square" by  Vijay Gokale.இந்த பத்தகம் 1990வாக்கில் பீஜ்ஜிங்கில் உள்ள தினான்மென் சதுக்கத்தில் நடந்த மாணவர் போராட்டம்,அதை தொடர்ந்து சீன கம்யூணிஸ்ட் அரசாங்கம் அவர்கள் மீது நடத்திய கொடுமையான தாக்குதல் பற்றியது.இந்த வன்முறை தாக்குதலில் ஆயிரத்திற்க்கும் மேலான மாணவர்கள் பலியாகியிருக்க்க்கூடும் என்று நம்ப்ப்படுகிறது.இந்நூல் ஆசிரியர் இந்திய வெளியுறவுத்துறையின் செயலாளராகவும்,சீனாவின் இந்திய தூதராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.இந்த சம்பவம் நிகழ்ந்தபோது பீஜ்ஜிங்கிலேயே இந்திய தூதரகத்தில் பணியாற்றியுள்ளார்.

            மேற்குலகு ஊடகங்கள் இந்த சம்பவம் ஏதோ சீன மாணவர்கள் ஜனநாயகத்திற்க்காக போராடியதாகவும் சீன கம்யுணிஸ்ட் கட்சி விரைவில் அதிகாரத்தை இழந்துவிடும் என்றும் செய்தி வெளியிட்டன.ஆனால் கடந்த முப்பது ஆண்டுகளில் சீனாவில் நடந்ததோ வேறு.கம்யுணிஸ்ட் கட்சி தன் அதிகாரத்தை மேலும் பலப்படுத்தி கொண்டதோடல்லாமல்,மீண்டும் மாணவர் போராட்டமோ அல்லது எந்தவொரு சிறு போராட்டமோ தலையெடுக்காமல் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.சீனாவில் ஜனநாயகம் மலருவதற்க்கான எந்த நம்பிக்கை கீற்றும் தெரியவில்லை.மேற்குலகு ஊடகங்கள் முற்றிலும் தவறாக கணித்துவிட்டன.

            மாசேதுங் மறைவிற்க்குப் பிறகு சீனாவின் பொருளாதார கொள்கைகளில் தலைகீழ் மாற்றங்கள் ஏற்ப்பட்டன.அதன் முக்கிய காரணகர்தா டிங் ஜியோப்பிங்.மாசேதுங் மறைவிற்க்குப் பிறகு சீனாவின் முக்கிய தலைவரானவர்.டிங் மாவிடமிருச்து பொருளாதார கொள்கையில் மட்டுமே மாறுபட்டாரேவொழிய,அரசியல் கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை.ஒற்றைக்கட்சி ஆட்சிமுறைதான் சீனாவிற்க்கு உகந்தது என்பதில் எந்த சந்தேகமும் இல்லாதவர்.

            டிங் தன் பொருளாதார திட்டத்தினை செயல்படுத்த, கட்சியிலும் ஆட்சியிலும் இளந்தலைமுறை தலைவர்களை நியமித்தார்.அவர்களுக்கிடையேயான போட்டாபோட்டி காரணமாகவும் அரசியல் கொள்கைகளில் டிங்ஙின் நிலைப்பாடு என்ன என்பதில் அவர்களுக்கிருந்த தவறான கணிப்பினாலும்,சில தவறான கொள்கை முடிவுகளை(கம்யுணிஸ்ட் கட்சியை பொருத்தவரை)  எடுக்கிறார்கள்.சிறிது ஊடக சுதந்திரம்,கல்லூரிகளில் அரசாங்கத்தை விமர்சித்து ஆய்வுக்கூட்டம் நடத்தவும் அனுமதியளிக்கப்படுகிறது.

            அவ்வாறு ஊழலுக்கெதிராக சிறுசிறு கூட்டங்கள் கல்லூரிகளில் நடைபெற்று வந்த நிலையில்,பிரபல கம்யூணிஸ்ட் கட்சித் தலைவர் ஒருவர் காலமாகிறார்.அவருக்கஞ்சலி செலுத்த கல்லூரி மாணவர்கள் தினான்மென் சதுக்கத்தில் கூடுகிறார்கள்.அஞ்சலி கூட்டம் விரைவில் ஊழலுக்கெதிரான போராட்டமாக மாறுகிறது.அதற்கு பொதுமக்கள் ஆதரவும் ஊடக ஆதரவும் கிடைக்கின்றன.இந்நிலையில் சோவியத்யூனியன் அதிபர் சீனாவிற்க்கு வருகை தருகிறார்.அவர் வருகையின் போது மாணவர்கள் போராட்டத்தை வாபஸ் பெற வலியுருத்தப்படுகிறார்கள்.மாணவர்கள் அதை நிராகரித்து,தொடர்ந்து போராடுகிறார்கள்.சோவியத் அதிபர் சொன்றபின்,சீன கம்யூணிஸ்ட் கட்சி மாணவர் போராட்டத்தை தன் வழியில் முடிவுக்கு கொண்டுவருகிறது.

            கடந்த முப்பது ஆண்டுகளாக சீனாவிற்க்கு வெளியில்தான் இச்சம்பவம் நினைவுகூரப்படுகிறதே தவிர,சீனாவில் இது முற்றாக மக்கள் நினைவிலிருந்து அகற்றப்பட்டுவிட்டது.என்னதான் பொருளாதார வளர்ச்சி எட்டினாலும்,உலக வல்லரசாக மாறினாலும்,அடக்குமறையில் பிரச்சனையை தற்காலிகமாக தீர்த்தாலும்,என்றேனும் அக்கினிக்குஞ்சொன்று காட்டை அழிக்கத்தான் செய்யும்.

            ஆசிரியர் எந்தவித மிகைப்படுத்தலும் இல்லாமல் அன்றாட சீன அரசியல் நிகழ்வுகளை ஆராய்ந்து இச்சம்பவத்தை அணுகியிறுப்பது இந்நூலின் சிறப்பு.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Crime and Punishment

                                                   ராஸ்கோல்நிகோவ் என்னும் இளைஞன் இரு கொலைகளைச் செய்கிறான்.ஏன் இந்த கொலைகளை செய்தான்?கொலைக்கு பின்னான அவன் மனப்போராட்டம் .இதையேயே மையமாக வைத்து   எழதபட்ட மிகமிக சுவார்ஸ்யமான,விருவிருப்பான நாவல்.இது வெறும் துப்பரியும் நாவல் மட்டும் இல்லை.             ராஸ்கோல்நிகோவ் ஒரு மதுபான விடுதியில் தற்செயலாக மார்மல்யாடோவை சந்திக்கிறான்.மார்மல்யாடோவ் தன் சோக கதையை ராஸ்கோல்நிகோவிடம் விவரிக்கிறார்.ஒட்டுமொத்த நாவலிலும் மிகச் சிறந்த பகுதி என்று இதைத்தான் குறிப்பிடுவேன்.மார்மல்யாடோவ் தன் முதல் மனைவி மூலம் பெற்ற மகள் சோபியா(சோனியா).பதின்ம வயது.முதல் மனைவி இறந்தவுடன் இரண்டாம் திருமணம் செய்து கொள்கிறார்.அவரின் இரண்டாம் மனைவிக்கும்(கட்ரினா இவானோவ்னா) இது இரண்டாம் திருமணம்.அவரின் முதல் திருமணம் மூலம் ஏற்கனவே மூன்று குழந்தைகள்.மூவரும் பால்ய வயதினர்.மார்மல்யாடோவ் தன் குடும்பத்த...

Sapiens: A Brief History of Humankind - Yuval Noah Harari

                     இது நான் மிகுந்த ஆவலுடன் படிக்கத் துவங்கிய நூல்.ஆனால் படித்து முடிக்கும் போது மிகுந்த ஏமாற்றத்துடன் இருந்தது.ஹராரி ஒரு பிரசாரகர்(propagandist).காலனியாதிக்கம்,முதலாளித்துவம்,மேற்கத்திய மேட்டிமைவாதம் இவைகளின் பிரசாரகர்.இந்த நூலில் எனக்கிருந்த பிரச்சனைகளை கீழே பட்டியலிடுகிறேன்.               ஆதிகாலத்தில்  மனிதன் அமெரிக்காவிற்க்கும், ஆஸ்திரேலியாவிற்க்கும் முதன்முதலில் குடியேறிய நாட்களில்  அங்கு அவர்கள் செய்ததாக சொல்லப்படும் செயல்கள் ஊகங்களே(எ.கா.பெரும்பான்மையான அரிய வகை விலங்குகளை கொன்றொழித்தது).அதற்கு எந்தவித உறுதியான ஆதாரங்களும் இல்லை.ஆனால் ஹராரி எல்லாவற்றையும் விலாவாரியாக ஏதோ நேரில் பார்த்தவர் போல்  விவரிக்கிறார்.ஏன் இவ்வாறு செய்கிறார் என்பது நூலின் பிற்பகுதியை படிக்கும் போதுதான் புரிகிறது.மேற்கத்தியர்கள் காலனியாதிக்கதின் போது அவர்கள் செய்த கொடுஞ்செயல்களை ஆதிகால பழங்குடியினர் செய்த செயல்களோடு ஒப்பிடும் போது ஒன்றுமில்லை என உணர்த்தத்தான் அவ்வாறு எழுதியிருக...

ஜெயமோகன் குறுநாவல்கள்

                         கிளிக்காலம்:          ஒரு விடலைச்சிறுவன் பெரியவனாகும் கதை.ஜெயமோகன் தரத்தில் இது சுமார் கதை.ஆனால் இதிலும் நல்ல விவரணை.கதை களத்தை கண்முன் காட்டும்படி விவரித்திருக்கிறார். பூமியின் முத்திரைகள்:          இது சுமாரான கதை.நண்பனின் இறப்பை ஒட்டி அவன் நினைவுகளை பகிர்ந்துள்ளார்.இதில் வரும் விவரணைகள் எதுவும் கவரவில்லை.      மடம்:         இது முழுக்க முழுக்க கிண்டல்.இதில் மடத்தின் குருவையோ , குருவிற்க்கு அடுத்ததாக வரும் பண்டாரத்தையோ கிண்டல் செய்யவில்லை.கிண்டல் முழுக்க கனபாடிகளைத்தான்.தமிழ்நாட்டில் திராவிட கழகங்கள் இல்லாத நிலையில் இக்கதை சுவாரிஸ்யமாக இருந்திருக்கும்.ஆனால் இங்கு நாளொரு மேனியும் இதே போன்ற பிரச்சாரம் இருப்பதால் இந்த கதை ஈர்ப்புடையதாக இல்லை. லங்காதகனம்:          கதையின் போக்கு முதலிலிருந்தே ஊகிக்க கூடியதாக இருந்தது.மடத்தின் விவரிப்...