சரவணபவன் உரிமையாளர் இராஜகோபால் அவர்களின் வளர்ச்சியும் வீழ்ச்சியும்

                    இந்த புத்தகத்தின் ஆரம்பமே ஒரு த்ரில்லர் படத்தின் ஆரம்பம் போன்றுதான் இருந்தது.கொடைக்கானல் போலிஸ் மலையடிவாரத்தில் அழுகும் நிலையில் ஒரு ஆண் பிணத்தை கண்டுபிடிக்கிரார்கள்.அது யார் என்று அடையாளம் தெரியாததால், பிரேத பரிசோதனை செய்து அடக்கம் செய்கிரார்கள்.அதிலிருந்து புத்தகம் இராஜகோபால் அவர்களின் இளமை காலத்திற்க்கு திரும்புகிறது.

                                                Buy Murder on the Menu : The Sensational Story of the Tycoon Who Founded  Saravana Bhavan Book Online at Low Prices in India | Murder on the Menu :  The Sensational Story
    தென்கோடி தமிழகத்தின் ஒரு குக்கிராமத்தில் ஒரு சாதாரண கீழ்நடுத்தரவர்க  குடும்பத்தில் பிறக்கிறார்.இளமையிலிருந்தே தாயின் மூலம் முருக பக்தியுடன் வளர்கிறார்.பள்ளிப் படிப்பை பாதியிலேயே நிருத்திவிட்டு, சிறு சிறு வேலைகள் செய்து ,கடைசியாக தன் 15ம் வயதில் சென்னைக்கு வருகிறார்.கே.கே.நகரில் மளிகை கடையில் வேலை பார்க்க ஆரம்பித்தவர்,வெகுவிரைவிலேயே சொந்த தொழில் ஆரம்பிக்க முனைகிறார்.
    அந்த காலகட்டத்தில் கே.கே.நகரில் நல்ல உணவகங்கள் இல்லாத நிலையில்,சரவணபவன் ஆரம்பிக்கிறார்.இந்நிலையில் இப்புத்தகம் 1980 வாக்கில் சென்னையின் ஹோட்டல் நிலவரமும் மக்களின் உணவு பழக்கவழக்கமும் பற்றி மிக அழகாக விரிவாக விவரிக்கிறது.சரவணபவன் ஆரம்பித்த்திலிருந்தே அதன் தரத்திலும் சுவையிலும் மிக கவனமாக இருந்துள்ளார்.ஆரம்பித்த ஒரு சில வருடங்களிலேயே சரவணபவன் கொடிகட்டிப் பறக்கிறது.மிகவிரைவிலேயே சென்னை முழுதும் கிளைபரப்புகிறார்.
    ஆரம்பம்முதலே தன் ஊழியர்களை கண்ணும் கருத்துமாக கவனித்து வருகிறார்.அவர்களுக்கு சம்பளம் போக மருத்துவ காப்பீடு,குழந்தைகளின் முழு கல்விச்செலவு,பொங்கல் தீபாவளி போனஸ் என்று அனைத்தும் தரபடுகின்றன.இதனால் நிறைய பேர் சரவணபவன் சேர்கிறார்கள்.அப்படி சேர்ந்த ஒருவர்தான் பதின்பருவத்து ஜீவஜோதியின் தந்தை.
    அவர் சேர்ந்த முதலே அண்ணாச்சியின் பார்வை ஜீவஜோதி மேல் விழுகிறது.அடிக்கடி அவர் தந்தைக்கு பணவுதவி செய்கிறார்.இந்நிலையில் ஜீவஜோதியின் தம்பி ராம்குமார்க்கு கணக்கு tution எடுக்க அவர்கள் வீட்டிற்க்கு அடிக்கடி வருகிறார் சாந்தகுமார்.சில வருடங்களிலேயே நட்பு காதலாகி திருமணம் செய்து கொள்கிறார்கள்.அன்று ஆரம்பித்த்து அவர்களுக்கான பிரச்சனை.அடுத்த ஆறு ஆண்டுகளுக்கு நீடித்தது. அவர் செய்த பிரச்சனைகள் கொடுமைகள் பற்றி அறிய இப்புத்தகத்தை படிக்கவும்.கடைசியில் சாந்தகுமார் கொலைசெய்யப்பட்டு கொடைகானலில் தூக்கி வீசியெறியப்படுகிறார்.
    இராஜகோபால் ஒரு பெண்பித்தர் என்று தெரிகிறது.ஜீவஜோதி episodeற்க்கு முன்பே தன் ஹோட்டலில்  வேலை செய்த ஒரு  இளைஞரின் இளம் மனைவியை பணபலத்தாலும் ஆட்பலத்தாலும் மிரட்டி மணந்துள்ளார்.பணம் இருப்பதனால் எதையும் செய்யமுடியும் என்ற மிதப்பில் திரிந்துள்ளார்.
    இந்த ஒட்டுமொத்த சம்பவத்திலும்  ஆட்பலம்,பணபலம் என்று எந்த உருட்டலுக்கும்,மிரட்டலுக்கும் ஆளாகாமல் போராடிய ஜீவஜோதி பெண்களுக்கு ஒரு முன்மாதிரிதான்..சாந்தகுமார் கொலைக்கு முன்பே ஜீவஜோதி கொடுத்த புகாருக்கு எந்த நடவடிக்கையும் எடுக்காத போலிஸ் , சாந்தகுமார் மறைவிற்க்குப்பின், ஜீவஜோதி ஜெயல்லிதாவை சந்தித்தபின் தீவிர நடவடிக்கை எடுக்கிறது.2001 அக்டோபரில் நடந்த கொலைக்கு,2002ல் குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு சிறப்பு நீதிமன்றத்தால் தண்டிக்கப்படுகிறார்.மேல் முறையீட்டை 2009ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து ஆயுள் தண்டனையை உறுதி செய்கிறது.உச்ச நீதிமன்றம் சென்ற மேல்முறையீடு,மீண்டும் தள்ளுபடி செய்யப்பட்டு 2019ல் ஆயுள் தண்டனை உருதி செய்யப்படுகிறது.
    இந்த வழக்கு நடந்த கிட்டத்தட்ட இருபதாண்டுகாலத்தில் ,மொத்தம் 8 மாதங்களே இராஜகோபால் சிறையில் இருந்துள்ளார்.மீதிநாட்கள் முழுதும் ஜாமீன்.உச்ச நீதிமன்றம் தீர்ப்புவந்து சரணடையும் கடைசி நாளன்று 'திடீர்'  நெஞ்சு வலியால்  இராஜகோபால் மரணமடைகிறார்.இராஜகோபால் தண்டனை பெற்றாரா அல்லது மரணத்தின் மூலம் தப்பிவிட்டாரா?தெரியவில்லை.
    ஜீவஜோதி சாந்தகுமார் மறைவிற்க்குப்பின்  மறுமணம் செய்துகொண்டு இரு குழந்தைகளுக்கு தாயாகியுள்ளார்.கணவருடன் ஹோட்டல் நடத்துகிறார்.சமீபத்தில் பா.ஜா.க.வில் இணைந்து அரசியலில் இறங்கியுள்ளார்.
    இப்புத்தகம் விருவிருப்பாகவும் சுவாரிஸ்யம் சிறிதும் குறையாமலும் உள்ளது.ஆசிரியர் எந்த முன்முடிவகளும் இன்றி உள்ளது உள்ளபடி எழுதியுள்ளார்.ஆசிரியர் நிருப்பமா சுப்ரமணியன் இந்தியாவின் முன்னணி பத்திரிக்கையாளர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக