M. S. Subbulakshmi: The Definitive Biography - T.J.S.George

  நான் இந்த புத்தகத்தை படிப்பதற்க்கான முக்கிய காரணம் இதில் எம்.எஸ்.சுப்புலட்சுமி G.N.Bக்கு எழுதிய காதல் கடிதங்கள் உள்ளன என்பதால்தான்.இதை படித்து முடித்தபோது எம்.எஸ் பற்றிய ஒரு பிம்பம் கிடைத்தது.ஏற்கனவே அவர்  பற்றிய பிம்பத்தில் சிறிது மாற்றம் ஏற்ப்பட்டாலும் , எந்த சிதைவும் இல்லை.இதற்கு காரணம்  சிரு வயதிலிருந்தே அவரைப்பற்றிய செய்திகளை கேட்டே வளர்ந்திருக்கிறேன்.

                                                         

எம்.எஸ் பற்றிய பிம்பமென்பது அவர் அலாதி பக்தியள்ளவர்.இசை ஒன்று மட்டுமே தெரிந்தவர்.கெஞ்சம் வெகுளி.கணவணே கண்கண்ட தெய்வம் என்றிருந்தவர்.இவை அனைத்தும் உண்மைதான்.ஆனால் அவர் ஒன்றும் தெரியாத அப்பாவி அல்ல.இந்த பிம்பம் திருமணத்திற்க்கு முன் எம்.எஸ் G.N.Bக்கு எழுதிய காதல் கடிதங்களால் உடையலாம் என சிலர் கருதலாம்.நான் அவ்வாறு நினைக்கவில்லை.இந்த கடிதங்கள் எம்.எஸ் ன் அக்காலத்திய மனவோட்டத்தை புரிந்து கொள்ள உதவலாம்.எம்.எஸ் தன் எதிர்காலத்தை கணக்கிட்டே தன்னுடைய காதல் முடிவுகளை எடுத்திருக்கிறார் என்றே இந்நூலாசிரியர் சொல்லவருகிறார்.நாம் அனைவருமே அப்படித்தான்.எதிர்காலத்தை மனதில் வைத்தே எதையும் செய்கிறோம்.எம்.எஸ் தான் வாழ்வில் அடைந்த உச்சங்கள் அனைத்தையும்  அடையவேண்டும் என முன்னறே கணித்திருக்க முடியாது.ஆனால்  அவர் வாழ்கை அவரை உச்சத்திற்க்கு கொண்டுவந்துவிட்டது.

இந்திய வரலாறு நெடுக கலாச்சாரரீதியாக மிகப்பெரிய பங்களிப்பாற்றிய இசை வேளாளர் (தேவரடியார்) மரபில் வந்த ஒருவருக்கு பாரத ரத்னா உட்பட அனைத்து விருதுகளும் கௌரவங்களும் கிடைத்திருப்பது அந்த சமுதாயத்திற்க்கே செய்யப்பட்ட சிறிய கௌரவமாக கருதுகிறேன்.இதற்க்காக பாடுபட்ட அவருடைய கணவர் சதாசிவத்தின் பங்களிப்பு அபாரமானது.

சதாசிவம் பற்றி நிறைய தகவல்கள் உள்ளன.ஆனால் அவரைப்பற்றிய முழுப்பிம்பம் கிடைத்தமாதிரி தெரியவில்லை.ஏதோ குறைகிறது.(ஒரு உதிரித் தகவல், சதாசிவத்துடன் உடன்பிறந்தவர்கள் அவரையும் சேர்த்து மொத்தம் 16.இதில் விஷேசம் என்னவென்றால் அவருடைய அம்மா அவர் அப்பாவிற்க்கு இரண்டாவது மனைவி.முதல் மனைவி மூலம் மேலும் இரண்டு குழந்தைகள்.ஆக மொத்தம் 18 குழந்தைகள். சதாசிவத்தின் தாய் தன் கடைசி காலத்தில் சந்யாசம் பெற்று காசிக்கு சென்றுவிட்டார்).

இந்த புத்தகம் எம்.எஸ்யை ஒரு வெள்ளந்தியாகவே காட்துகிறது.ஆனால் அவருடைய இளமைகால காதல் கடிதங்கள் அவர் அவ்வாறு இல்லை என்று காட்டுகிறது.இந்த பிம்பம் எம்.எஸ் என்றில்லை.நம் பாட்டிகள் எல்லாரையும் நாம் ஒரு வெள்ளந்தியாகத்தான் நினைக்கிறோம்.அது அவர்கள் இயல்பாகவே இருக்கலாம்(நான் அது நடிப்பு என்று நினைக்கவில்லை).ஆனால் அவர்களுக்கும் ஆசாபாசங்கள் இருந்திருக்கும்.எம்.எஸ்ன் கடிதங்கள் கிடைத்துவிட்டது.நம் பாட்டிகளின் கடிதங்கள் கிடைக்கவில்லை.அவ்வளவுதான் வேறுபாடு.இதனால் அவர்களின் நடத்தையிலோ அல்லது பண்பிலோ நான் எந்த தவரையும் உணரவில்லை.நம் புரிதல்தான் தவறானது.

இது ஒரு இசை மேதை பற்றிய வரலாற்று புத்தகம்.ஆனால் இசைப் பற்றிய குறிப்புகள் மிகக்குறைவு.அங்கங்கே ராகங்கள் பெயரை குறிப்பிடுகிறார்.மற்றபடி ஆசிரியருக்கு இசை பற்றிய ஞானமில்லை என்பது தெரிகிறது.இவருக்கு கர்னாடசங்கீதம் தெரிந்திருந்தால் ,இந்த பத்தகம் மேலும் சிறப்பாக வந்திருக்கும்.யாரோ எம்.எஸ்-G.N.B கடிதங்கள் பற்றி செல்லியிருக்க்க்கூடும்.அதற்காகவே இந்த பத்தகம் எழுதியிருப்பார்.ஏதோ இந்த புத்தகம் எழுதும்போது நடுவே G.N.B.க்கு வேண்டிய சிலர் கொடுத்த்தாக சொல்கிறார்.

எம்.எஸ்ன் வாழ்கையில் மிக முக்கியமான காலகட்டமென்பது 1940-1990 வரை.இந்த காலகட்டத்திய அரசியல் பற்றிய குறிப்பகள் மிக்க்குறைவு.இராஜாஜி,கல்கி பற்றிய செய்திகள் உள்ளன.ஆனால் திராவிட இயக்கம் பற்றிய செய்திகள் சுத்தமாக இல்லை. எம்.எஸ் தமிழக அரசியல் பற்றி என்ன நினைத்தார்? தேவதாசி ஒழிப்புச் சட்டம் பற்றிய அவர் அவிப்ராயம் என்ன? எந்த தகவலுமில்லை.ஆசிரியர் எழுதியவற்றை சிறப்பாக எழுதியிருக்கிறார்.ஆனால் பல விஷயங்கள்,பல தளங்களை அவர் தொடவேயில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக