முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஒற்றை வைக்கோல் புரட்சி - மசானபு ஃபுகோகோ




             

        என் புரிதலில் இயற்கை விவசாயமென்றால் வேதிப்பொருள் கலந்த உரங்களைப் பயன்படுத்தாமல்,மரபனு கலப்பின விதைகளை பயன்படுத்தாமல் இயற்கையாக கிடைக்கும் விளைபொருட்களை கொண்டே செய்யப்படும் விவசாயம்.ஆனால் இந்த புத்தகத்தைப் படித்தபிறகு இன்னும் ஒரு படி மேலே சென்று நிலம் உழுதல் கூட இயற்கை விவசாயத்தில்(ஏர் பூட்டியோ அல்லது ட்ராக்டர் உதவியுடனோ) தேவையில்லாதது.எவ்வாறு காட்டில் யாருடைய முயற்சியுமின்றி மரங்கள் வளர்ந்து காய்கனிகள் காய்க்கின்றனவோ , அதேபோல விவசாயமும் இயற்கையிடமே விட்டுவிடப்படவேண்டும்.

            விவசாயி விதைகளைத் மட்டும் தூவிவிட்டு அறுவடை செய்யும் வரை எந்த வேலையும் செய்யாமல் இருத்தலே போதுமானது.நிலம் உழுதலே இயற்கை வேளாண்மைக்கு தேவையில்லாத்து என்பது ஆச்சர்யமளிக்கும் செய்தி.பூச்சிகளும் மண்புழுக்களுமே தன்னிச்சையாக நிலம் உழுதலை செய்துவிடுகின்றன.நாமாக உழும்போது இப்படிப்பட்ட மண்புழுக்கள் இறப்பதற்க்கும் ,முளைக்கவே முடியாத களைச்செடிகள் முளைத்துவிடும் வாய்ப்பும் உள்ளதால் நிலம் உழுதலே தேவையில்லாதது என்கிறார் ஆசிரியர்.

          களைகளை நீக்க வைக்கோலை வயலில் பரப்புவதே போதுமானது.இந்த வைக்கோலே களைகளை வளராமல் தடுத்துவிடுவதால் தேவையேயில்லாமல் களைகொல்லிகளை பயன்படுத்துவதை தவிர்க்கலாம்.மேலும் வைக்கோல் மட்கி நாளடைவில் மண்ணின் வளம் பெருகுகிறது.களிமண் உருண்டைகளில் விதைகளைத்தூவி  விதைத்தலும் களைகளை அகற்ற போதுமானது.   

          தாவரங்களை தாக்கும் நோய்க்கிருமிகளை அழிக்கவே உரம் பயன்படுத்தப்படுகிறது.ஆனால் இந்த  நோய்க்கிருமிகளை உண்ணும் பூச்சியினங்கள் இயற்கையாகவே உள்ளதால் அவைகளே போதுமானது.விவசாயிகள் செய்யவேண்டியதெல்லாம் இப்படிப்பட்ட பூச்சியினங்களை அதிகரிக்க என்ன செய்ய வேண்டுமோ அதை செய்தால் போதுமானது.மசானு  ஃபுகோகா கூற்றுப்படி இயற்கை வேளாண்மையில் விவசாயி ஒரு நாளைக்கு ஒரு மணி நேரத்திற்க்கு மேல் வேலை செய்யவேண்டிய அவசியமில்லை.அவர் கூற்றுப்படி விவசாயிக்கு ஏராளமான ஓய்வுநேரம் கிடைக்கும்.அதில் அவர்கள் கவிதை,கலை போன்றவற்றிற்க்கு நேரம் செலவழித்து மகிழலாம்.

          மசானு  ஃபுகோகா நுகர்வோருக்கு சொல்லும் அறிவுரை அந்தந்த பருவ காலங்களில் விளையும் பழங்கள்  காய்கறிகள் தானியங்களே உணவிற்க்கு சிறந்தது.பருவம் தவறி விளையும் பழம் காய்கறிகள் உடல் நலத்திற்க்கு கேடானது.இயற்கை வேளாண்மையில் பொருட்கள் விலை குறைவாகவே இருக்கமுடியும்.காரணம் வவசாயியின் உழைக்கும் நேரம் குறைகிறது.உரம்,விதை செலவுகள் அறவே இல்லை.அதனால் விளைபொருள் விலையும் குறைவாகவே இருக்க முடியும்.

          மசானு  ஃபுகோகா  இயற்கை வேளாண்மை பற்றி மட்டும் பேசவில்லை.தத்துவம்,ஆன்மீகம் மற்றும் மேலை கீழை தேச தரிசனங்கள் என பல தளங்களுக்கு பயணம் செய்கிறார்.கண்மூடித்தனமான அறிவியல் ஆதரவை விமர்சிக்கிறார்.அணுஆயுத ஆபத்தும்,அணுஉலை கதிர்வீச்சு ஆபத்தும், போப்பால் விஷவாயு கசிவும் , சமீபத்திய கரோனா வைரஸும் அறிவியலின் ஆபத்துக்களை எடுத்துக்காட்டுகின்றன.

          இந்த நூல் வெறும் வேளாண்மை பற்றிய நூல் மட்டுமல்ல.இது ஒரு வாழ்கை வழிகாட்டி.

 மசானு  ஃபுகோகா wiki link :   https://en.wikipedia.org/wiki/Masanobu_Fukuoka

(இந்த விமர்சனம் கரோனா காலகட்டத்தில் (2020) ஒரு நோட்டுப்புத்தகத்தில் எழுதப்பட்டது.)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Crime and Punishment

                                                   ராஸ்கோல்நிகோவ் என்னும் இளைஞன் இரு கொலைகளைச் செய்கிறான்.ஏன் இந்த கொலைகளை செய்தான்?கொலைக்கு பின்னான அவன் மனப்போராட்டம் .இதையேயே மையமாக வைத்து   எழதபட்ட மிகமிக சுவார்ஸ்யமான,விருவிருப்பான நாவல்.இது வெறும் துப்பரியும் நாவல் மட்டும் இல்லை.             ராஸ்கோல்நிகோவ் ஒரு மதுபான விடுதியில் தற்செயலாக மார்மல்யாடோவை சந்திக்கிறான்.மார்மல்யாடோவ் தன் சோக கதையை ராஸ்கோல்நிகோவிடம் விவரிக்கிறார்.ஒட்டுமொத்த நாவலிலும் மிகச் சிறந்த பகுதி என்று இதைத்தான் குறிப்பிடுவேன்.மார்மல்யாடோவ் தன் முதல் மனைவி மூலம் பெற்ற மகள் சோபியா(சோனியா).பதின்ம வயது.முதல் மனைவி இறந்தவுடன் இரண்டாம் திருமணம் செய்து கொள்கிறார்.அவரின் இரண்டாம் மனைவிக்கும்(கட்ரினா இவானோவ்னா) இது இரண்டாம் திருமணம்.அவரின் முதல் திருமணம் மூலம் ஏற்கனவே மூன்று குழந்தைகள்.மூவரும் பால்ய வயதினர்.மார்மல்யாடோவ் தன் குடும்பத்த...

Sapiens: A Brief History of Humankind - Yuval Noah Harari

                     இது நான் மிகுந்த ஆவலுடன் படிக்கத் துவங்கிய நூல்.ஆனால் படித்து முடிக்கும் போது மிகுந்த ஏமாற்றத்துடன் இருந்தது.ஹராரி ஒரு பிரசாரகர்(propagandist).காலனியாதிக்கம்,முதலாளித்துவம்,மேற்கத்திய மேட்டிமைவாதம் இவைகளின் பிரசாரகர்.இந்த நூலில் எனக்கிருந்த பிரச்சனைகளை கீழே பட்டியலிடுகிறேன்.               ஆதிகாலத்தில்  மனிதன் அமெரிக்காவிற்க்கும், ஆஸ்திரேலியாவிற்க்கும் முதன்முதலில் குடியேறிய நாட்களில்  அங்கு அவர்கள் செய்ததாக சொல்லப்படும் செயல்கள் ஊகங்களே(எ.கா.பெரும்பான்மையான அரிய வகை விலங்குகளை கொன்றொழித்தது).அதற்கு எந்தவித உறுதியான ஆதாரங்களும் இல்லை.ஆனால் ஹராரி எல்லாவற்றையும் விலாவாரியாக ஏதோ நேரில் பார்த்தவர் போல்  விவரிக்கிறார்.ஏன் இவ்வாறு செய்கிறார் என்பது நூலின் பிற்பகுதியை படிக்கும் போதுதான் புரிகிறது.மேற்கத்தியர்கள் காலனியாதிக்கதின் போது அவர்கள் செய்த கொடுஞ்செயல்களை ஆதிகால பழங்குடியினர் செய்த செயல்களோடு ஒப்பிடும் போது ஒன்றுமில்லை என உணர்த்தத்தான் அவ்வாறு எழுதியிருக...

ஜெயமோகன் குறுநாவல்கள்

                         கிளிக்காலம்:          ஒரு விடலைச்சிறுவன் பெரியவனாகும் கதை.ஜெயமோகன் தரத்தில் இது சுமார் கதை.ஆனால் இதிலும் நல்ல விவரணை.கதை களத்தை கண்முன் காட்டும்படி விவரித்திருக்கிறார். பூமியின் முத்திரைகள்:          இது சுமாரான கதை.நண்பனின் இறப்பை ஒட்டி அவன் நினைவுகளை பகிர்ந்துள்ளார்.இதில் வரும் விவரணைகள் எதுவும் கவரவில்லை.      மடம்:         இது முழுக்க முழுக்க கிண்டல்.இதில் மடத்தின் குருவையோ , குருவிற்க்கு அடுத்ததாக வரும் பண்டாரத்தையோ கிண்டல் செய்யவில்லை.கிண்டல் முழுக்க கனபாடிகளைத்தான்.தமிழ்நாட்டில் திராவிட கழகங்கள் இல்லாத நிலையில் இக்கதை சுவாரிஸ்யமாக இருந்திருக்கும்.ஆனால் இங்கு நாளொரு மேனியும் இதே போன்ற பிரச்சாரம் இருப்பதால் இந்த கதை ஈர்ப்புடையதாக இல்லை. லங்காதகனம்:          கதையின் போக்கு முதலிலிருந்தே ஊகிக்க கூடியதாக இருந்தது.மடத்தின் விவரிப்...