The Anarchy - William Dalrymple

           எனக்கு தெரிந்த இந்திய வரலாறு என்பது 1947க்கு பின் நடந்தவை.அதற்கு முன்பான வரலாறென்பது துணுக்குச்செய்திகளாக தெரியுமே தவிர விரிவான பார்வை கிடையாது.பொதுவாக என் புரிதலென்பது 200 ஆண்டுகள் ஆங்கிலேய ஆட்சி அதற்கு முன் 800 ஆண்டுகள் முகலாயர்கள் ஆட்சி அதில் சில பெயர்கள் தவிர பெரிதாக எதுவும் தெரியாது.அவ்வப்போது படிக்கும் சில கட்டுரைகள்.இவையெல்லாம் துணுக்குச்செய்திகளாக தெரியுமே தவிர,ஒட்டுமொத்த வரலாறு தெரியாது.இந்த பின்னணியில் The Anarchy புத்தகம் 1600 முதல் 1800 வரையிலான இந்தியாவின் முழு வரலாற்றையும் விவரிக்கிறது.கிழக்கிந்திய கம்பெனி(EIC) தோன்றியதிலிருந்து அவர்கள் இந்தியாவை தங்கள் முழு கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது வரை மிகமிக விரிவாக சுவாரஸ்யமாக இந்த நூலின் ஆசிரியர் எழுதியுள்ளார்.இப்படிப்பட்ட ஒரு வரலாற்று நூல் இதற்கு முன் நான் படித்ததில்லை.

                                                The Anarchy : Dalrymple, William: Amazon.in: Books
      ஆசிரியர் இந்தியாவை ஆங்கிலேயர்கள் ஆண்டதை விட பெரும்பாலும் EIC தான் ஆண்டது,பெரும்பாலான கொள்ளை என்பது EICஆல் தான் நடந்தது , ஒரு வணிக நிறுவனம் எந்த கட்டுப்பாடும் இல்லாமலிருந்தால் அதன் சுரண்டல் எவ்வாறு இருக்கும் என்பதற்கு EICஐ  உதாரணம் காட்டுகிறார்.ஆசிரியர் இந்திய காலணியாதிக்கதிற்க்கு EICஐ பொருப்பாக்கிவிட்டு ஆங்கிலேயரசை தப்பிக்கவைக்க நினைக்கிறாரோ என்று ஐயம் எழுகிறது.என்ன நோக்கம் இருந்தாலும் இந்த நூல் மிக சுவாரிஸ்யமான முக்கியமான நால் என்றே கருதுகிறேன்.
      1599ல் எப்படி EIC ஆரம்பிக்கப்பட்டது?அதன் நோக்கம் என்ன?அன்றைய இங்கிலாந்து நாட்டின் நிலை என்ன?மற்றைய ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடும் போது இவர்களின் நிலை என்ன?அவர்கள் எவ்வாறு இந்தியா வந்தார்கள்?இந்திய முகலாய அரசுகள் அவர்களை எவ்வாறு அணுகின?எவ்வாறு அவர்கள் மெல்ல மெல்ல ஒவ்வொருவரையாக வீழ்த்தினர்?கடைசியில் மொத்த இந்தியாவையும் எவ்வாறு கைப்பற்றினர்? இவை அனைத்தையுமே மிக விரிவாக விளக்கியிருக்கிறார்.இது வரலாற்று நூல் என்பதைவிட ஒரு நாவல் போல கண்முன்னே நடப்பதை போல் எழுதியிருக்கிறார்.
      என் பார்வையில் ஆங்கிலேயர்கள் முதல் நூறாண்டுகள் வியாபாரம் மட்டும் செய்து அடுத்த நூறாண்டுகளில் முழு இந்தியாவையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரமுடிந்ததற்க்கு முக்கிய காரணம் வலிமையான மைய அரசு இல்லாததுதான்.  முகலாயர்கள் இருந்தாலும் அவர்கள் ஆட்சியென்பது வடஇந்தியா மட்டும்தான்.பிற பகுதிகள் அனைத்தும் சிறுசிறு அரசுகள்தான்.ஒருங்கிணைந்த வலிமையான மைய அரசு இல்லாதபட்சத்தில் மீண்டும் அந்நியர் ஆதிக்கம் என்பது உறுதி.
  இந்த வரலாற்றின் மற்றொரு பாடம் வலிமையான இராணுவம் ஒரு நாட்டின் பாதுகாப்பிற்க்கு எவ்வளவு  இன்றியமையாதது என்பது.வல்லரசு வேண்டாம் நல்லரசு மட்டும் போதும் என்ற கோஷங்கள் கேட்க வேண்டுமானால் நன்றாகயிருக்கும்.நடைமுறைக்கு உதவாது.வெறும் அடிமையரசாகதான் இருக்கும்.
      ஆங்கிலேயர்கள் எவ்வாறு டெல்லியில்,வங்காளத்தில் முகலாயர்களை வென்றார்கள்,மத்தியில் மராத்தாகளை வென்றது,தென்னிந்தியாவில் திப்பு சுல்தானை வென்றது என தகவல்கள் உள்ளனவே தவிர தமிழக சூழ்நிலைப்பற்றி எந்த செய்தியுமில்லை.இந்த நூலுக்கு முன் மு.இராஜேந்திரன் அவர்கள் எழுதிய காலாப்பாணி நாவலை படித்திருந்தேன்.ஆனால் அதில் சொல்லப்பட்ட எந்த செய்தியும் The Anarchyல் இல்லை.இராணுவபலத்துடன் உள்ள அரசுகளைப் பற்றி மட்டுமே இதில் உள்ளது.பிற சிற்றரசுகளைப் பற்றிய செய்திகள் எதுவும் இதில் இல்லை.
      ஆசிரியர் இந்த நூலில் காட்டிய இரண்டு அரசர்கள் நீண்ட நாள் நம் நினைவில் இருப்பார்கள்.ஒருவர் ஷா ஆலம்,பெரும்பாலும் துயர் நிறைந்த ,பரிதாபப்படகூடிய வாழ்க்கை.மற்றொருவர் திப்பு சுல்தான்.ஒரு சிங்கம் என்பதைப் போல்தான் காட்டியிருக்கிறார்.வங்கபஞ்சத்தின் போது வரும் ஒரு நிகழ்ச்சி மனதை உலுக்கியது.EIC அதிகாரி ஒருவர் அவர் சாப்பிட்டுமுடித்து தூக்கியெரிந்த எச்சில் எழும்புத்துண்டை அவர் வீட்டின் வெளியே இருக்கும் இந்தியர்கள் பொருக்கியெடுத்து ஒன்றுமேயில்லாத சக்கை எழும்புதுண்டை நாலைந்து பேர் உறிஞ்சி உறிஞ்சி உண்ண முயல்கிறார்கள்.கடும் பஞ்சத்தின் விளைவு.
      இன்னொரு நிகழ்ச்சி சுவாரஸ்யமானது.கவர்னர் ஜென்றலாகயிருந்த Warren Hastingsக்கும்  அவருக்கு கீழ் பணிபுரிந்த Francisக்கும்   இடையே நடந்த duel(ஒத்தைக்கொத்த சண்டை).அவ்வளவு பெரிய பதவியில் இருந்துகொண்டு  இந்த காட்டுமிராண்டித்தனமான ,அதுவும் துப்பாக்கியால் ஒருவரையொருவர் சுட்டுக்கொண்டு சண்டை போட்டது நாகரீக சமூகத்தின் அலகல்ல.இவர்களுக்கிடையேயான ego போட்டிக்கே இந்த மாதிரி சண்டையென்றால் ,இந்தியர்களை எப்படி நடத்தியிருப்பார்கள்.இவர்களின் இந்த மனநிலைதான் இவர்கள் ஈராக்,ஆப்கானிஸ்தான்,காஜா போன்ற தேசங்களில் இவர்கள் செய்யும் அட்டுலியங்களுக்கான காரணம்.
      நான் முன்பே சொன்னதுபோல் இந்திய காலனியாதிக்கத்திற்க்கு EIC தான் பெரும் பொருப்பு, ஆங்கில அரசுக்கு அல்ல என்பதை நிறுவ எழுதப்பட்டதுதான் இந்த நூல் என கருத இடமிருக்கிறது.மற்றபடி மிகமிக சுவாரஸ்யமான மொழி நடை.புத்தகம் ஆரம்பம் முதல் இறுதி வரை தொய்வேயில்லாமல் ஒரு திரைப்படம் பார்த்த அனுபவம்.
      ஆசிரியருக்கு  என் வணக்கங்கள் !!
      
 
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக