முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

White Mughals - William Dalrymple

 

               பதினெட்டாம் நாற்றாண்டின் இறுதியில் கிழக்கிந்திய கம்பெனியில் பணியாற்றிய ஓர் ஆங்கிலேய அதிகாரிக்கும்(ஜேம்ஸ் கிரிக்பட்ரிக்) இந்திய முகலாய ஆளும் வர்க பெண்ணுக்கும்  (கைர்-உன்-நிசா பேகமமுடன்) இடையிலான காதலை முன் வைத்து எழுதப்பட்ட வரலாற்று நூல்.White Mughals என்றால் இந்திய முகலாய மூஸ்லீம் பெண்களை மணந்த கிழக்கிந்திய கம்பெனியின் ஆங்கில அதிகாரிகள்.இவர்கள் மற்றைய ஆங்கில அதிகாரிகளை போல் சுரண்டல் ஒன்றையே குறிக்கோளாக கொள்ளாமல் இந்தியாவை கொஞ்சம் அனுதாபத்தோடு அணுகியுள்ளனர்.இப்படிபட்ட சிலபல அதிகாரிகளில் ஒருவர் ஜேம்ஸ் கிரிக்பட்ரிக்.
     இந்த நூலின் நல்ல விஷயமென்பது நாம் White Mughals பற்றி மட்டும் தெரிந்து கொள்ளவில்லை.18ம் நூற்றாண்டில் எவ்வாறு முகலாய அரசுகள் இயங்கின என்பதைப் பற்றியும் ,ஹைதராபாத் நகரின் வரலாறு பற்றியும் விரிவான தகவல்களை தெரிந்து கொள்ள முடியும்.
      William Dalrymple தனக்கு கிடைத்த ஆதாரங்களை வைத்து இந்நாலை சுவாரிஷ்யமாக  எழுதியுள்ளார்.ஆனால் White Mughals பற்றிய,அதுவும் குறிப்பாக ஜேம்ஸ் கிரிக்பட்ரிக் பற்றிய அவருடைய சித்தரிப்பு மிகையென்றே தோன்றுகிறது.கிரிக்பட்ரிக் பற்றிய வரலாற்றிலும் நிறைய இடைவெளிகள் உண்டு.அவற்றையெல்லாம் ஊகத்தினால் நிரப்பி ஒரு நல்ல சித்திரத்தை தருகிறார்.கிரிக்பட்ரிக்-பேகம் காதலை லைலா-மஜ்னு,அம்பிகாபதி-அமராவதி காதல் அளவிற்க்கு உயர்துகிறார்.உண்மையில் கிரிக்பட்ரிக் அவ்வளவு நல்லவரா?
       தன் வாழ்நாளில் பலமுறை இந்தியப் பெண்களை திருமணம் செய்து கொண்டவர்.இங்கு திருமணம் என்பதை ஒரு வசதிக்காகத்தான் பயன்படுத்தியுள்ளேன்.மற்றபடி அவர் பல இந்தியப் பெண்கள் மூலம் குழந்தைகள் பெற்றுகொண்டவர்.அவர்கள் யாரையும் அவர் வளர்த்த்தில்லை.ஆனால் கைர்-உன்-நிசா பேகமமுடன் அவருடைய உறவு சற்று வித்யாசமானது. அவருடன் பெற்ற இரு குழந்தைகளை மட்டும் இங்கிலாந்து அனுப்பியுள்ளார்.இதற்கு காரணம் பேகத்தின் முகலாய ஆளும் வர்க்கப் பின்னணிதானே தவிர,பேகமமுடன் கொண்ட காதலல்ல.காதலுக்காக கிரிக்பட்ரிக்  உண்மையில் என்ன இழந்தார்?அவர் கிருஷ்துவ மத்தையெல்லாம் விடவில்லை.கடைசிவரை கிருஷ்துவனாகவே இருந்துள்ளார்.அவருடைய இரு குழந்தைகளும் கிருஷ்துவர்களாகவே வளர்க்கப்பட்டுள்ளனர்.என்னதான் விசாரணை நடந்தாலும்,அவருடைய பதவிக்கு எந்த ஆபத்தும் வரவில்லை.    
     இந்த நூலிலும் நூலின் முன்னுரையிலும் ஆசிரியர் இந்தியர்களின் வரலாற்று ஆவணங்களை பாதுகாப்பதில் உள்ள அலட்சியத்தை பற்றி விமர்சித்திருப்பார்.இது முழுக்க முழுக்க உண்மை.இந்தியர்களுக்கு வரலாற்றை பற்றிய பார்வையும் இல்லை.வரலாற்று சின்னங்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற அக்கறையும் இல்லை.வெறும் ஆட்டுமந்தைகள்.ஆனாலும் இந்த விஷயத்தில் ஆசிரியருடன் எனக்கு முரண்பாடும் உண்டு.கடந்த 200ஆண்டு கால காலனிய வரலாற்றில் கிரிக்பட்ரிக் போன்ற அதிகாரிகளெல்லாம் மிகச்சிறிய மனிதர்கள்.இவர்கள் விட்டுச் சென்றவற்றையும் இந்தியர்கள் பாதுகாக்க வேண்டுமென்பது வரலாற்று ஆர்வம் போல் தெரியவில்லை.கிழக்கிந்திய கம்பெனியில் ப்யூனாக பணியாற்றியவர் இந்தியாவில் ஏதாவது வீடு கட்டியிருந்தால் அதையும் நினைவுச்சின்னமாக பாதுகாக்கவேண்டும் என்பவர்கள்,காந்தி,அம்பேத்கர் ,விவேகானந்தர்  போன்ற இந்தியாவின் மிகப்பெரிய ஆளுமைகள்  இங்கிலாந்தில் வாழ்ந்த இடங்களையெல்லாம் நினைவுச்சின்னமாக பாதுகாப்பார்களா?எனக்கு தெரிந்து இலண்டனில் அம்பேத்கர் வாழ்ந்த வீட்டை இந்தியரசுதான் பராமரிக்கிறது.ஆங்கிலேயர்கள் அல்ல.நம்மூர் வரலாற்றார்வலர்களும் 200 ஆண்டுகால ஆங்கிலேய நினைவுச்சின்னங்களை பற்றி பேசுகிறார்களே தவிர ஆயிரமாண்டுகால கோயில்கள் சீரழிந்து கொண்டிருப்பதைப் பற்றி கவனிப்பதேயில்லை.இதற்கு காரணம் ஆங்கில மோகமும் அடிமை மனநிலையும்தான்.
     இந்த நூலில் இந்தியர் ஆங்கிலேயர் நல்லுறவென்றால் ஒரு ஆங்கிலேயர் அழகான ஆளும்வர்க முகலாய பெண்ணை திருமணம் செய்வதுதான்.மாறாக ஒர் இந்திய ஆளும்வர்க ஆண் ஒரு ஆங்கில பெண்மணியை திருமணம் செய்ததாக எந்த செய்தியும் இந்த நூலில் இல்லை.Dalrympleன் மற்ற நூல்களைப் போலவே இதிலும் ஹிந்துகளை பற்றிய எந்த தகவலும் இல்லை.இந்தியர்கள் என்றால் முகலாயர்கள் மட்டும்தான்.அப்போது ஹிந்துகள் எங்கிருந்தார்கள்?எந்த செய்தியும் இல்லை.
     சாதாரண ஒரு விஷயத்தை ஊதிப் பெரிதாக்குவது என்பார்களே அதேபோல்தான் இந்த நூலும்.நூலின் மொழிநடை அழகுக்காகவும் ஹைதராபாத் நகரின் வரலாற்றை பற்றிய ஆர்வமுள்ளவர்களும்  ஒருமுறை படிக்கலாம்.கிரிக்பட்ரிக் பற்றிய ஆளுமை பெரும்பாலும் Dalrympleன் கற்பனையால் உருவாக்கப்பட்டது.அவர் வரலாற்றாசிரியராக ஆகாமலிருந்தால் ,சிறந்த திரைகதை ஆசிரியர் ஆகியிருப்பார்.

     

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Crime and Punishment

                                                   ராஸ்கோல்நிகோவ் என்னும் இளைஞன் இரு கொலைகளைச் செய்கிறான்.ஏன் இந்த கொலைகளை செய்தான்?கொலைக்கு பின்னான அவன் மனப்போராட்டம் .இதையேயே மையமாக வைத்து   எழதபட்ட மிகமிக சுவார்ஸ்யமான,விருவிருப்பான நாவல்.இது வெறும் துப்பரியும் நாவல் மட்டும் இல்லை.             ராஸ்கோல்நிகோவ் ஒரு மதுபான விடுதியில் தற்செயலாக மார்மல்யாடோவை சந்திக்கிறான்.மார்மல்யாடோவ் தன் சோக கதையை ராஸ்கோல்நிகோவிடம் விவரிக்கிறார்.ஒட்டுமொத்த நாவலிலும் மிகச் சிறந்த பகுதி என்று இதைத்தான் குறிப்பிடுவேன்.மார்மல்யாடோவ் தன் முதல் மனைவி மூலம் பெற்ற மகள் சோபியா(சோனியா).பதின்ம வயது.முதல் மனைவி இறந்தவுடன் இரண்டாம் திருமணம் செய்து கொள்கிறார்.அவரின் இரண்டாம் மனைவிக்கும்(கட்ரினா இவானோவ்னா) இது இரண்டாம் திருமணம்.அவரின் முதல் திருமணம் மூலம் ஏற்கனவே மூன்று குழந்தைகள்.மூவரும் பால்ய வயதினர்.மார்மல்யாடோவ் தன் குடும்பத்த...

Sapiens: A Brief History of Humankind - Yuval Noah Harari

                     இது நான் மிகுந்த ஆவலுடன் படிக்கத் துவங்கிய நூல்.ஆனால் படித்து முடிக்கும் போது மிகுந்த ஏமாற்றத்துடன் இருந்தது.ஹராரி ஒரு பிரசாரகர்(propagandist).காலனியாதிக்கம்,முதலாளித்துவம்,மேற்கத்திய மேட்டிமைவாதம் இவைகளின் பிரசாரகர்.இந்த நூலில் எனக்கிருந்த பிரச்சனைகளை கீழே பட்டியலிடுகிறேன்.               ஆதிகாலத்தில்  மனிதன் அமெரிக்காவிற்க்கும், ஆஸ்திரேலியாவிற்க்கும் முதன்முதலில் குடியேறிய நாட்களில்  அங்கு அவர்கள் செய்ததாக சொல்லப்படும் செயல்கள் ஊகங்களே(எ.கா.பெரும்பான்மையான அரிய வகை விலங்குகளை கொன்றொழித்தது).அதற்கு எந்தவித உறுதியான ஆதாரங்களும் இல்லை.ஆனால் ஹராரி எல்லாவற்றையும் விலாவாரியாக ஏதோ நேரில் பார்த்தவர் போல்  விவரிக்கிறார்.ஏன் இவ்வாறு செய்கிறார் என்பது நூலின் பிற்பகுதியை படிக்கும் போதுதான் புரிகிறது.மேற்கத்தியர்கள் காலனியாதிக்கதின் போது அவர்கள் செய்த கொடுஞ்செயல்களை ஆதிகால பழங்குடியினர் செய்த செயல்களோடு ஒப்பிடும் போது ஒன்றுமில்லை என உணர்த்தத்தான் அவ்வாறு எழுதியிருக...

ஜெயமோகன் குறுநாவல்கள்

                         கிளிக்காலம்:          ஒரு விடலைச்சிறுவன் பெரியவனாகும் கதை.ஜெயமோகன் தரத்தில் இது சுமார் கதை.ஆனால் இதிலும் நல்ல விவரணை.கதை களத்தை கண்முன் காட்டும்படி விவரித்திருக்கிறார். பூமியின் முத்திரைகள்:          இது சுமாரான கதை.நண்பனின் இறப்பை ஒட்டி அவன் நினைவுகளை பகிர்ந்துள்ளார்.இதில் வரும் விவரணைகள் எதுவும் கவரவில்லை.      மடம்:         இது முழுக்க முழுக்க கிண்டல்.இதில் மடத்தின் குருவையோ , குருவிற்க்கு அடுத்ததாக வரும் பண்டாரத்தையோ கிண்டல் செய்யவில்லை.கிண்டல் முழுக்க கனபாடிகளைத்தான்.தமிழ்நாட்டில் திராவிட கழகங்கள் இல்லாத நிலையில் இக்கதை சுவாரிஸ்யமாக இருந்திருக்கும்.ஆனால் இங்கு நாளொரு மேனியும் இதே போன்ற பிரச்சாரம் இருப்பதால் இந்த கதை ஈர்ப்புடையதாக இல்லை. லங்காதகனம்:          கதையின் போக்கு முதலிலிருந்தே ஊகிக்க கூடியதாக இருந்தது.மடத்தின் விவரிப்...