முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Pather Panchali - Bibhutibhushan Bandyopadhyay

                            Pather Panchali - Penguin Random House India                         

            இந்த வருடம் நான் படித்த மிகச் சிறந்த நாவல் என்றால் அது இதுதான்.மிகச் சிறந்த நாவல்.கொஞ்சம் கூட மிகையில்லாமல் யதார்த்தமாக வங்கத்தின் கிராமிய வாழ்க்கையை படம் பிடித்துக்காட்டுகிறார்.நாவல் முழுவதும் சிறுவர்கள் பார்வையிலேயே எழுதப்பட்டுள்ளதால் சாதாரணமாக தெரியும் விஷயங்களும் அசாதரணமாக ஆகிவிடுகின்றன.

         இந்த நாவலில் வரும் கதாபாத்திரங்கள் இனி என் வாழ்நாள் முழுக்க என்னுடனேயே இருக்கப் போகிறார்கள்.துர்காவும் ஓப்புவும் குழந்தைகள்.இவர்களை எல்லோருக்கும் பிடிக்கும்.எனக்கும்தான்.அதைவிட இவர்களின் தாயான சோர்போச்யாதான் எனக்கு பிடித்த கதாபாத்திரம்.வயதானவர்களின் வலியை நிற்கதியை அழுத்தமாக பதிவு செய்யும் நாவல்.18/19ம் நூற்றாண்டில் வறுமை எவ்வாறு ஒவ்வொரு குடும்பத்தையும் வதைத்திருக்கும் என்பதை உணர்த்தும் நாவல்.

        ஒன்றுமே இல்லாத நிலையிலும் மகிழ்ச்சியாக வாழ்வதெப்படி என்பது குழந்தைகளான ஓப்பு மற்றும் துர்காவினால்தான் முடியும்.நாவல் படிக்கும் போது மூன்று இடங்களில் நான் அழுதுவிட்டேன்.துர்காவின் மரணம்,ஓப்பு அருகிலுள்ள கிராமத்திற்கு சென்று அங்கு சந்திக்கும் அந்த சிறுப்பெண், அவளை விட்டுப்பிரியும் தருணம்,அந்த ஊர் ஜாத்ராவில் நடிக்கும் சிறுவன் தன்னிடம் உள்ள ஐந்து ரூபாயை துர்காவின் திருமணத்திற்கு சேலை வாங்கி கொள்ளுமாறு சொல்லும் தருணம்.இவை எதுவும் ஓவர் சென்டிமெண்டாக சொல்லப்படவில்லை.

          சோர்போச்யா கடைசிவரை கஷ்டத்தில்தான் இருக்கிறாள்.அவள் எதிர்பார்த்த பொற்காலம் கடைசிவரை வரவேயில்லை.ஒரே மகிழ்ச்சி ஓப்பு மட்டும்தான்.

        இந்த நாவலை படித்துமுடித்தவுடன் சத்யஷித்ரே இயக்கிய படத்தை பார்த்தேன்.படம் நன்றாக இருந்தது.ஆனால் நாவலிலிருந்து சில மாற்றங்களை செய்துள்ளார்.ஹோரிஹர் குடும்பம் ஊரை விட்டு வெளியேறுவதுடன் படம் முடிகிறது.இரயிலில் பயணம் செய்வது, காசி வாழ்க்கை,காசிக்கு பின்னான வாழ்க்கை படமாக்கப்படவில்லை.படத்தில் ஒவ்வொரு கதாபாத்திரத்தின் நடிகர் தேர்வும் கச்சிதம்.அனைவருமே பிரமாதமாக நடித்துள்ளனர்.அந்த பாட்டியாக வருபவர் அசத்தியிருக்கிறார்.ஆனாலும் படத்தை விட நாவல்தான் பிரமாதம்.

        வங்க இலக்கியத்தை பற்றி ஏன் பெரிதாக பேசுகிறார்கள் என்பது இந்த நாவலை படித்தவுடன்தான் புரிந்தது.இது தான் நான் படித்த முதல் வங்க மொழி படைப்பு.இதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ரிமி(Rimi)க்கு வாழ்த்துகள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Crime and Punishment

                                                   ராஸ்கோல்நிகோவ் என்னும் இளைஞன் இரு கொலைகளைச் செய்கிறான்.ஏன் இந்த கொலைகளை செய்தான்?கொலைக்கு பின்னான அவன் மனப்போராட்டம் .இதையேயே மையமாக வைத்து   எழதபட்ட மிகமிக சுவார்ஸ்யமான,விருவிருப்பான நாவல்.இது வெறும் துப்பரியும் நாவல் மட்டும் இல்லை.             ராஸ்கோல்நிகோவ் ஒரு மதுபான விடுதியில் தற்செயலாக மார்மல்யாடோவை சந்திக்கிறான்.மார்மல்யாடோவ் தன் சோக கதையை ராஸ்கோல்நிகோவிடம் விவரிக்கிறார்.ஒட்டுமொத்த நாவலிலும் மிகச் சிறந்த பகுதி என்று இதைத்தான் குறிப்பிடுவேன்.மார்மல்யாடோவ் தன் முதல் மனைவி மூலம் பெற்ற மகள் சோபியா(சோனியா).பதின்ம வயது.முதல் மனைவி இறந்தவுடன் இரண்டாம் திருமணம் செய்து கொள்கிறார்.அவரின் இரண்டாம் மனைவிக்கும்(கட்ரினா இவானோவ்னா) இது இரண்டாம் திருமணம்.அவரின் முதல் திருமணம் மூலம் ஏற்கனவே மூன்று குழந்தைகள்.மூவரும் பால்ய வயதினர்.மார்மல்யாடோவ் தன் குடும்பத்த...

Sapiens: A Brief History of Humankind - Yuval Noah Harari

                     இது நான் மிகுந்த ஆவலுடன் படிக்கத் துவங்கிய நூல்.ஆனால் படித்து முடிக்கும் போது மிகுந்த ஏமாற்றத்துடன் இருந்தது.ஹராரி ஒரு பிரசாரகர்(propagandist).காலனியாதிக்கம்,முதலாளித்துவம்,மேற்கத்திய மேட்டிமைவாதம் இவைகளின் பிரசாரகர்.இந்த நூலில் எனக்கிருந்த பிரச்சனைகளை கீழே பட்டியலிடுகிறேன்.               ஆதிகாலத்தில்  மனிதன் அமெரிக்காவிற்க்கும், ஆஸ்திரேலியாவிற்க்கும் முதன்முதலில் குடியேறிய நாட்களில்  அங்கு அவர்கள் செய்ததாக சொல்லப்படும் செயல்கள் ஊகங்களே(எ.கா.பெரும்பான்மையான அரிய வகை விலங்குகளை கொன்றொழித்தது).அதற்கு எந்தவித உறுதியான ஆதாரங்களும் இல்லை.ஆனால் ஹராரி எல்லாவற்றையும் விலாவாரியாக ஏதோ நேரில் பார்த்தவர் போல்  விவரிக்கிறார்.ஏன் இவ்வாறு செய்கிறார் என்பது நூலின் பிற்பகுதியை படிக்கும் போதுதான் புரிகிறது.மேற்கத்தியர்கள் காலனியாதிக்கதின் போது அவர்கள் செய்த கொடுஞ்செயல்களை ஆதிகால பழங்குடியினர் செய்த செயல்களோடு ஒப்பிடும் போது ஒன்றுமில்லை என உணர்த்தத்தான் அவ்வாறு எழுதியிருக...

ஜெயமோகன் குறுநாவல்கள்

                         கிளிக்காலம்:          ஒரு விடலைச்சிறுவன் பெரியவனாகும் கதை.ஜெயமோகன் தரத்தில் இது சுமார் கதை.ஆனால் இதிலும் நல்ல விவரணை.கதை களத்தை கண்முன் காட்டும்படி விவரித்திருக்கிறார். பூமியின் முத்திரைகள்:          இது சுமாரான கதை.நண்பனின் இறப்பை ஒட்டி அவன் நினைவுகளை பகிர்ந்துள்ளார்.இதில் வரும் விவரணைகள் எதுவும் கவரவில்லை.      மடம்:         இது முழுக்க முழுக்க கிண்டல்.இதில் மடத்தின் குருவையோ , குருவிற்க்கு அடுத்ததாக வரும் பண்டாரத்தையோ கிண்டல் செய்யவில்லை.கிண்டல் முழுக்க கனபாடிகளைத்தான்.தமிழ்நாட்டில் திராவிட கழகங்கள் இல்லாத நிலையில் இக்கதை சுவாரிஸ்யமாக இருந்திருக்கும்.ஆனால் இங்கு நாளொரு மேனியும் இதே போன்ற பிரச்சாரம் இருப்பதால் இந்த கதை ஈர்ப்புடையதாக இல்லை. லங்காதகனம்:          கதையின் போக்கு முதலிலிருந்தே ஊகிக்க கூடியதாக இருந்தது.மடத்தின் விவரிப்...