காட்டின் சுகானுபவங்கள், காட்டில் வாழும் அனைத்து சாதி ஏழை எளிய குடியானவர்கள்,வாழ்கையில் உயர்ந்த நிலையில் இருந்து தற்போது கஷ்டப்படுபவர்கள், உள்ளூர் மிராசுகளின் அடாவடிகள், தொற்று நோய் பரவல் மற்றும் அதற்கு வைத்தியம் பார்ப்பவர்கள், காட்டை விட்டே வெளிவராத பழங்குடிகள்,காட்டில் நடக்கும் திருவிழா,குறிப்பாக பெண்கள் ,அவர்களின் அழகு,கஷ்டங்கள் என அனைத்தையும் அழகாக நுட்பமாக விவரிக்கிறார்.
ஆசிரியர் அழகின் உபாசகர்.அது காடாக இருந்தாலும் பெண்களாக இருந்தாலும் அப்படி வர்ணித்திருக்கிறார். பானுமதி , மஞ்சி, யுகல் பிரசாத் நம் நினைவில் என்றும் இருப்பார்கள்.
ஆசிரியர் காட்டும் பீகாருக்கும் தற்போதைய பீகாருக்கும் பெரிய வேறுபாடு இல்லை. கடந்த நூறாண்டுகளாக அந்த பகுதி அதே வறுமையில்தான் உள்ளது.எந்த பெரிய முன்னேற்றமும் இல்லை.
இதில் சொல்லப்படும் ஒரு செய்தி மனிதனுக்கு வாழ்வில் முக்கியமானது முன்னுக்கு வருதலை விட மகிழ்ச்சியே.அதிக நுகர்வைத்தான் நாம் முன்னுக்கு வருதல் என்கிறோம்.நுகர்வின் இன்பம் எல்லைக்குட்பட்டது.அளவுக்கு மீறிய நுகர்வு மூளையை மழுங்கடிக்கும்.இதே காரணத்தினால்தான் ஆசிரியர் வங்க மேட்டுக்குடிகளை விமர்சிக்கவும் பழங்குடிகளை ஆராதிக்கவும் செய்கிறார்.
இவ்வளவு இருந்தும் வனவாசியை நாவல் என்று சொல்ல முடியுமா?அல்லது ஆசிரியரின் நினைவுக்குறிப்புகளின் தொகுப்பா?என்னவாக இருந்தாலும்கூட நல்ல வாசிப்பனுபவம். ஆனால் பதேர் பாஞ்சாலி அளவிற்கு ஆழம் இல்லை.இதை அழகாக தமிழில் மொழிபெயர்த்த த.நா.சேனாபதி அவர்களுக்கு நன்றி !!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக