முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

The Man Who Knew Infinity - Robert Kanigel

 

ஒருவருடைய வாழ்க்கை வரலாற்றை எப்படி எழுத வேண்டும் என்பதற்கு இந்த நூல் ஒரு சிறந்த உதாரணம்.இந்நூல் மூலம் ராமானுஜன் மேலும் G.H.Hardy மேலும் ஏற்படும் பெருமதிப்பு,வியப்பு இந்நூலாசிரியர் மேலும் ஏற்படுகிறது.காரணம் இந்நாலூக்காக அவர் செலுத்தியிருக்கும் உழைப்பு.

ராமானுஜத்தின் கணிதம் எவ்வளவு சிக்கலானதோ அதேபோல அவர் வாழ்க்கையும் சிக்கலானது.காலத்தால் நூறு ஆண்டுகளுக்கு முந்தையது.ஆசிரியருக்கு இந்திய வாழ்கைமுறை மிக அண்ணியமானது.மேலும் நூறு ஆண்டுகளுக்கு முந்தைய வாழ்கைமுறை அவருக்கு மேலும் புரிந்து கொள்ள கடினமானது.இருந்தும் மிகச் சிறப்பாக இந்நாலை எழுதியிருக்கிறார்.

ராமானுஜனின் பிறப்பு முதல் அவரின் இறுதி காலம் வரை அவருடையப்  பயணத்தை அழகாக சொல்லியிருக்கிறார்.இது எந்த அளவுக்கு ராமானுஜனின் வரலாரோ அதே அளவுக்கு G.H.Hardyன் வரலாறும் ஆகும்.ஒருவகையில் ஒருவரை பிரித்து இன்னொருவர் வரலாற்றை எழுதிவிட முடியாது என்றளவிற்கு அவர்கள் பிணைப்புள்ளது.

ராமானுஜன் ஒரு சுயம்புவாகவே கணிதம் கற்றிருக்கிறார்.அவர் கணிதப்புத்தகம் மூலம் தானே பயின்றிருக்கிறார்.எந்த முறையான கணிதப் பயிற்ச்சியும் அவருக்கில்லை.இது வரமா அல்லது சாபமா என்பது ஆய்வுக்குரியது. G.H.Hardy  ராமானுஜனின் சிறப்பாக அவருடைய originality மற்றும்  intutionஐ கருதுகிறார்.அவர் முறையான பயிற்சி பெற்றிருந்தால் அந்த originality மற்றும்  intutionஐ இழந்திருக்கலாம்  என்று கருதுகிறார்.இந்திய கல்விமுறை(12 ஆண்டு பள்ளிக்கல்வி, 3 ஆண்டு கல்லூரிப் படிப்பு) நம்மை குமாஸ்தாவாகவே உருவாக்கும்.எந்த புதிய முயற்சியும் கண்டுபிடிப்பும் உருவாகிட வழியில்லை.G.H.Hardy அக்காலத்திய தேர்வுமுறையை(Tripos's) வெகுவாக சாடுகிறார்.இது தற்காலத்திய நுழைவுத் தேர்வுகளை நினைவுரறுத்துகிறது.ராமானுஜமும் G.H.Hardyம் pure mathematicsஐயே விரும்பினர்.நூறாண்டுகளாகியும் ராமானுஜனின் நிறைய விதிகள்(theorms) மற்றும் சமன்பாடுகள்(equations) கணிதவியளாளருக்கு புதிராகவே உள்ளன.ஒருவர் எவ்வாறு இப்படி சிந்திக்க இயலும் என்பது ஆச்சர்யமாகவே உள்ளது.

எந்தவொரு புதிய கண்டுபிடுப்பும் ஒரு  கணநேரத்தில் உதிப்பதே.அதுவொரு நுண்ணுனர்வு(intution).எப்போதும் நம்முடன் இருப்பதே.அதை அறிந்துகொள்வதே கண்டுபிடிப்பு.கல்வி எப்போதும் அதை(intution) வளர்ப்பதாகவே இருக்க வேண்டும்.மாறாக நம் கல்விமுறை அதை அழிப்பதாகவே உள்ளது.ஒரு வகையில் ஜெயமோகன் கூறியதைப்போல பகுத்தறிவு புதிய கற்பனையை தடுக்கக்கூடியதே..எப்போதும் விதிகளுக்குடபட்டே சிந்தித்தல் புதிய கண்டுபிடிப்புகளுக்கு தடைதான்.அந்த எல்லைகளுக்கு வெளியே விதிகளுக்கு(rules) மாறாக சிந்திக்கும் போதே புதிய திறப்புகள் கிடைக்கும்.இது அறிவியலுக்கு மட்டுமல்ல.அனைத்து துறைகளுக்கும் பொருந்தும்.

நாம் இன்றும் campus interviewலும் நுழைவுத் தேர்வில் தேர்வாவதையும் வெற்றி என நினைத்துக்கொண்டிருந்தால் சிறந்த குமாஸதாகளையே உற்பத்தி செய்ய இயலும்.(நான் பார்த்தவரையில் ஐ.டி துறையில் குமாஸ்தாவாக இல்லாத ஒருவரைக்கூட கண்டதில்லை)ஒருவருடைய தனித்தன்மையை வளர்க்காமல் பொதுமைப்படுத்தலையே நாம் செய்து கொண்டிருக்கிறோம்.நம் கல்விமுறையும் கல்வி பற்றிய நம் புரிதலும் மாற வேண்டிய மாற்ற வேண்டிய தருணம் இது.அனைவரும் கண்டிப்பாக படிக்க வேண்டிய பத்தகம்.


(இந்த விமர்சனம் கரோனா காலகட்டத்தில் (2020) ஒரு நோட்டுப்புத்தகத்தில் எழுதப்பட்டது.)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Crime and Punishment

                                                   ராஸ்கோல்நிகோவ் என்னும் இளைஞன் இரு கொலைகளைச் செய்கிறான்.ஏன் இந்த கொலைகளை செய்தான்?கொலைக்கு பின்னான அவன் மனப்போராட்டம் .இதையேயே மையமாக வைத்து   எழதபட்ட மிகமிக சுவார்ஸ்யமான,விருவிருப்பான நாவல்.இது வெறும் துப்பரியும் நாவல் மட்டும் இல்லை.             ராஸ்கோல்நிகோவ் ஒரு மதுபான விடுதியில் தற்செயலாக மார்மல்யாடோவை சந்திக்கிறான்.மார்மல்யாடோவ் தன் சோக கதையை ராஸ்கோல்நிகோவிடம் விவரிக்கிறார்.ஒட்டுமொத்த நாவலிலும் மிகச் சிறந்த பகுதி என்று இதைத்தான் குறிப்பிடுவேன்.மார்மல்யாடோவ் தன் முதல் மனைவி மூலம் பெற்ற மகள் சோபியா(சோனியா).பதின்ம வயது.முதல் மனைவி இறந்தவுடன் இரண்டாம் திருமணம் செய்து கொள்கிறார்.அவரின் இரண்டாம் மனைவிக்கும்(கட்ரினா இவானோவ்னா) இது இரண்டாம் திருமணம்.அவரின் முதல் திருமணம் மூலம் ஏற்கனவே மூன்று குழந்தைகள்.மூவரும் பால்ய வயதினர்.மார்மல்யாடோவ் தன் குடும்பத்த...

Sapiens: A Brief History of Humankind - Yuval Noah Harari

                     இது நான் மிகுந்த ஆவலுடன் படிக்கத் துவங்கிய நூல்.ஆனால் படித்து முடிக்கும் போது மிகுந்த ஏமாற்றத்துடன் இருந்தது.ஹராரி ஒரு பிரசாரகர்(propagandist).காலனியாதிக்கம்,முதலாளித்துவம்,மேற்கத்திய மேட்டிமைவாதம் இவைகளின் பிரசாரகர்.இந்த நூலில் எனக்கிருந்த பிரச்சனைகளை கீழே பட்டியலிடுகிறேன்.               ஆதிகாலத்தில்  மனிதன் அமெரிக்காவிற்க்கும், ஆஸ்திரேலியாவிற்க்கும் முதன்முதலில் குடியேறிய நாட்களில்  அங்கு அவர்கள் செய்ததாக சொல்லப்படும் செயல்கள் ஊகங்களே(எ.கா.பெரும்பான்மையான அரிய வகை விலங்குகளை கொன்றொழித்தது).அதற்கு எந்தவித உறுதியான ஆதாரங்களும் இல்லை.ஆனால் ஹராரி எல்லாவற்றையும் விலாவாரியாக ஏதோ நேரில் பார்த்தவர் போல்  விவரிக்கிறார்.ஏன் இவ்வாறு செய்கிறார் என்பது நூலின் பிற்பகுதியை படிக்கும் போதுதான் புரிகிறது.மேற்கத்தியர்கள் காலனியாதிக்கதின் போது அவர்கள் செய்த கொடுஞ்செயல்களை ஆதிகால பழங்குடியினர் செய்த செயல்களோடு ஒப்பிடும் போது ஒன்றுமில்லை என உணர்த்தத்தான் அவ்வாறு எழுதியிருக...

ஜெயமோகன் குறுநாவல்கள்

                         கிளிக்காலம்:          ஒரு விடலைச்சிறுவன் பெரியவனாகும் கதை.ஜெயமோகன் தரத்தில் இது சுமார் கதை.ஆனால் இதிலும் நல்ல விவரணை.கதை களத்தை கண்முன் காட்டும்படி விவரித்திருக்கிறார். பூமியின் முத்திரைகள்:          இது சுமாரான கதை.நண்பனின் இறப்பை ஒட்டி அவன் நினைவுகளை பகிர்ந்துள்ளார்.இதில் வரும் விவரணைகள் எதுவும் கவரவில்லை.      மடம்:         இது முழுக்க முழுக்க கிண்டல்.இதில் மடத்தின் குருவையோ , குருவிற்க்கு அடுத்ததாக வரும் பண்டாரத்தையோ கிண்டல் செய்யவில்லை.கிண்டல் முழுக்க கனபாடிகளைத்தான்.தமிழ்நாட்டில் திராவிட கழகங்கள் இல்லாத நிலையில் இக்கதை சுவாரிஸ்யமாக இருந்திருக்கும்.ஆனால் இங்கு நாளொரு மேனியும் இதே போன்ற பிரச்சாரம் இருப்பதால் இந்த கதை ஈர்ப்புடையதாக இல்லை. லங்காதகனம்:          கதையின் போக்கு முதலிலிருந்தே ஊகிக்க கூடியதாக இருந்தது.மடத்தின் விவரிப்...