முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

The Selfish Gene - Richard Dawkins

 

பொதுவாக நம்மிடம் ஒரு நம்பிக்கை உண்டு.அதாவது ஏலியன்கள் நம்மை விட அதி புத்திசாலிகளாக இருப்பார்கள்.ஏலியன்களையே பார்க்காமல் அவர்கள் நம்மைவிட புத்திசாலிகளாக இருப்பார்கள் என்று எவ்வாறு கூறமுடியும்.ஏனென்றால் மனிதர்களாகிய நம்மால் இதுவரை ஒரு விஷயத்தை கண்டுபிடிக்க முடியவில்லை.அதில் ஏலியன்கள் நம்மைவிட சிறந்தவர்களாக விடை தெரிந்தவர்களாக இருப்பார்கள் என நம்பப்படுகிறது.அந்த விஷயம் பூமியில் எவ்வாறு உயிர்கள் தோன்றின?இதற்கான விடை நம்மிடம் தற்போதுவரை இல்லை.நாம் கண்டுபிடித்ததெல்லாம் அனுமானங்கள்தான்(theory).திட்டவட்டமான விடை இல்லை.டார்வினின் பரிணாம வளர்ச்சிக்கொள்கைகூட ஓரு உயிரினத்திலிருந்து மற்றொரு உயிரினம் எவ்வாறு பரிணாம வளர்ச்சிப் பெற்றது என்பதைத்தான் சொல்கிறதே  தவிர எவ்வாறு உயிர்கள் தோன்றின என்பதைப் பற்றி சொல்லவில்லை.

Richard Dawkins(RK) இந்த அடிப்படை கேள்விக்கான விடை தேடியே இந்த புத்தகத்தை ஆரம்பிக்கிறார்.அவர் கூற்றுப்படி பூமியில் உள்ள எந்த உயிரினத்திற்க்கும் (மனிதன்,விலங்கு,பறவை,பூச்சிகள்,மரம்,செடி,கொடி,தாவரங்கள்) அடிப்படை அலகு என்பது மரபணு(gene) தான்.டார்வின் தன் பரிணாம வளர்ச்சி கொள்கையின்  அடிப்படையாக உயிரினங்களை கருதினார்.உயிரினங்கள் ஒன்றுடனொன்று போட்டியிட்டு யார் survival of the fittestஓ அவர்கள் இனம் பெருகும்.ஆனால் RKன் மரபணு கொள்கைப்படி மரபணுக்கள்தான் தங்கள் பரவலாக்கத்திற்க்காக உயிரினங்களை வளர்க்கின்றன.survival of the fittest போட்டி மரபணுக்களுகிடையேதான்.

தொடக்கத்தில் மரபணு ஒரு வேதியல் மூலகூறாக இருந்திருக்கலாம்.அவை எப்படியோ தன்னைத்தானே நகல்(copy) எடுத்துக்கொள்ளும் திறன் பெருகின்றன.இந்த மூலகூறுகளை replicators என்கிறார்.இவ்வாறு நகல் எடுக்க வசதியாக ஒரு ஊடகம் தேவைப்படுகிறது.அதை Survival Machine என்கிறார்.மனிதன்,விலங்குகள்,தாவரங்கள் அனைத்துமே Survival Machine தான்.உயிரினங்கள் அழியலாம்.ஆனால் மரபணு(gene) தன்னைப் பரப்பி கொண்டேயிருக்கும்.தன்னைதானே நகலெடுக்கும் இந்த மூலக்கூறுகளின் பரிணாமவளர்ச்சி என்பது அவை எவ்வளவு வேகமாக நகலெடுக்கின்றன?எவ்வளவு துல்லியமாக நகலெடுக்கின்றன? நகலெடுத்த மூலக்கூறுகள் எவ்வளவு நாள் நீடிக்கின்றன? என்பதைப் பொருத்தமைகின்றன.மாறிவரும் சூழ்நிலைக்கேற்ப்ப மரபணு(gene) தனக்கு தேவையான மாற்றங்களை உயிரினங்களில் செய்துகொள்ளும்.அதனால்தான் குளிர் பிரதேசங்களில் உள்ள உயிரினங்கள் அதிக ரோமத்துடனும் வெப்ப மண்டல உயிரினங்கள் குறைந்த ரோமத்துடனும் உள்ளன.

ஆண் பெண் பாலின வேறுபாடு எவ்வாறு உருவாகியிருக்கும் என்பதற்கான விளக்கம் சிறப்பு.முதலில் அனைத்து உயிரினங்களும் ஓர்பால் உயிரினமாகவே இருந்திருக்கும்.காலப்போக்கில் எந்த உயிரினம் கருவிற்க்கு அதிக உணவையும் சக்தியையும் கொடுக்கவல்லதோ அவை பெண்பாலாகவும்(பெரிய முட்டைகள்) ,மற்றவை ஆண்பாலாகவும்(sprem) ஆகியிருக்கும்.

உலகில் இயற்கை வளம் என்பது அள்ள  அள்ள குறையாத செல்வம் அல்ல.வரையறுக்கப்பட்டது.ஆதலால் மக்கட்தொகை கட்டுக்கடங்காமல் சென்றால் உணவுப்பஞ்சமும் போரும் நிச்சயம்.அறிவியல் வளர்ச்சியும் மருத்துவத்தில் புதிய பாய்ச்சலும் நிகழும் இக்காலத்தில் மனிதனின் சராசரி ஆயுட்காலம் கூடிக்கொண்டே செல்கிறது.இத்தகைய சூழ்நிலையில் தான் அரசாங்கங்கள் மக்கட்தொகை கட்டுப்பாடு போன்ற பிரச்சாரங்களை செய்கின்றன.ஆனால் விலங்குகளில் இத்தகைய பிரச்சாரமே இல்லாமல் அவைகளின் எண்ணிக்கை எப்படி கட்டுக்குள் இருக்கின்றன?ஏனென்றால் விலங்குகளில் இயற்கை மரணம் எய்துபவை மிகச்சொற்பம்.மற்றபடி பெரும்பாலானவை சிறிது தளர்ச்சியடைந்தவுடன் ,மற்ற விலங்குகளால் கொல்லப்பட்டுவிடும்.அதனால் அதன் எண்ணிக்கை கட்டுக்குள் உள்ளது.

memes பற்றி ஒரு அத்யாயம் உள்ளது.memes என்பது ஒரு புதிய யோசனை(idea),கண்டுபிடிப்பு,கருத்தாக்கம்,இசை,இப்படி எதுவாகவும் இருக்கலாம்.எவ்வாறு மரபணு(genes) தலைமுறை தலைமுறையாக கடத்தப்படுகிறதோ அப்படியே memesம் தலைமுறை தலைமுறையாக கடத்தப்படுகிறது.உதாரணம் காரல் மார்க்ஸின் கம்யுனிசம்,தியாகராஜரின் கீர்த்தனைகள்.

இந்த புத்தகத்தின் இன்னொரு சிறப்பு எவ்வாறு உயிரினங்கள் ஒன்றுடனொன்று பாசத்துடன் உள்ளன என்பதை விளக்கியுள்ளார்.ஏன் தாய்பாசம் தந்தை பாசத்தை விட அதிகம்?தாயோ தந்தையோ தன் எல்லா குழந்தைகளுடனும் ஒரே அளவு பாசத்துடன் இருப்பாற்களா? இந்த பாசம் என்பதே மரபணுக்களின் விளையாட்டுதான்.இந்த அன்பு பாசம் இவற்றிற்கான காரணிகள் மூன்று.1)releatedness(தொடர்புத்தன்மை) ,2)certainity(நிச்சயத்தன்மை) ,3)life expectancy(ஆயுள் எதிர்பார்ப்பு).பிறக்கும் குழந்தை தன்மூலம்தான் பிறந்தது என்ற நம்பிக்கை தாயைவிட தந்தைக்கு சற்று குறைவாகத்தான் இருக்கும்.அதனால்தான் தாய்ப்பாசம் அதிகம்.(இந்நூல் முழுவதும் ஆசிரியர் அவர் சொல்லவந்த கருத்துக்களை விலங்கு மற்றும் பூச்சிகளை அடிப்படையாக வைத்து விளக்குகிறார்.மனிதர்களை வைத்து விளக்கினால் நமக்கே உள்ள biasகளினால் விளங்கிக்கெள்வது கடினம்.இதை இந்நூலின் ஆரம்பத்திலேயே தேரிவித்துவிடுகிறார்).

இந்த நூல் வெளிவந்து கிட்டதட்ட ஐம்பதாண்டுகள் நிறைவடையப்போகிறது.உலகிலுள்ள பெரும்பாலான மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.ஐம்பதாண்டுகளில் மரபணுவியலில் பெரும் பாய்ச்சல் நிகழ்ந்துள்ளது.எனினும் இதிலுள்ள கருத்துக்கள் இன்றும் விவாததில் உள்ளன.மரபணுவியல் போன்ற சிக்கலான அறிவியல் கருத்துகளைப்பற்றி பொது
வாசகர்களும் புரிந்து கெள்ளும் வகையில் சொல்லியிருப்பது இந்நாலின் சிறப்பு.


இந்நால் படிக்கும் போது எடுத்துக்கொண்ட குறிப்புகள் கீழே.













கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Crime and Punishment

                                                   ராஸ்கோல்நிகோவ் என்னும் இளைஞன் இரு கொலைகளைச் செய்கிறான்.ஏன் இந்த கொலைகளை செய்தான்?கொலைக்கு பின்னான அவன் மனப்போராட்டம் .இதையேயே மையமாக வைத்து   எழதபட்ட மிகமிக சுவார்ஸ்யமான,விருவிருப்பான நாவல்.இது வெறும் துப்பரியும் நாவல் மட்டும் இல்லை.             ராஸ்கோல்நிகோவ் ஒரு மதுபான விடுதியில் தற்செயலாக மார்மல்யாடோவை சந்திக்கிறான்.மார்மல்யாடோவ் தன் சோக கதையை ராஸ்கோல்நிகோவிடம் விவரிக்கிறார்.ஒட்டுமொத்த நாவலிலும் மிகச் சிறந்த பகுதி என்று இதைத்தான் குறிப்பிடுவேன்.மார்மல்யாடோவ் தன் முதல் மனைவி மூலம் பெற்ற மகள் சோபியா(சோனியா).பதின்ம வயது.முதல் மனைவி இறந்தவுடன் இரண்டாம் திருமணம் செய்து கொள்கிறார்.அவரின் இரண்டாம் மனைவிக்கும்(கட்ரினா இவானோவ்னா) இது இரண்டாம் திருமணம்.அவரின் முதல் திருமணம் மூலம் ஏற்கனவே மூன்று குழந்தைகள்.மூவரும் பால்ய வயதினர்.மார்மல்யாடோவ் தன் குடும்பத்த...

Sapiens: A Brief History of Humankind - Yuval Noah Harari

                     இது நான் மிகுந்த ஆவலுடன் படிக்கத் துவங்கிய நூல்.ஆனால் படித்து முடிக்கும் போது மிகுந்த ஏமாற்றத்துடன் இருந்தது.ஹராரி ஒரு பிரசாரகர்(propagandist).காலனியாதிக்கம்,முதலாளித்துவம்,மேற்கத்திய மேட்டிமைவாதம் இவைகளின் பிரசாரகர்.இந்த நூலில் எனக்கிருந்த பிரச்சனைகளை கீழே பட்டியலிடுகிறேன்.               ஆதிகாலத்தில்  மனிதன் அமெரிக்காவிற்க்கும், ஆஸ்திரேலியாவிற்க்கும் முதன்முதலில் குடியேறிய நாட்களில்  அங்கு அவர்கள் செய்ததாக சொல்லப்படும் செயல்கள் ஊகங்களே(எ.கா.பெரும்பான்மையான அரிய வகை விலங்குகளை கொன்றொழித்தது).அதற்கு எந்தவித உறுதியான ஆதாரங்களும் இல்லை.ஆனால் ஹராரி எல்லாவற்றையும் விலாவாரியாக ஏதோ நேரில் பார்த்தவர் போல்  விவரிக்கிறார்.ஏன் இவ்வாறு செய்கிறார் என்பது நூலின் பிற்பகுதியை படிக்கும் போதுதான் புரிகிறது.மேற்கத்தியர்கள் காலனியாதிக்கதின் போது அவர்கள் செய்த கொடுஞ்செயல்களை ஆதிகால பழங்குடியினர் செய்த செயல்களோடு ஒப்பிடும் போது ஒன்றுமில்லை என உணர்த்தத்தான் அவ்வாறு எழுதியிருக...

ஜெயமோகன் குறுநாவல்கள்

                         கிளிக்காலம்:          ஒரு விடலைச்சிறுவன் பெரியவனாகும் கதை.ஜெயமோகன் தரத்தில் இது சுமார் கதை.ஆனால் இதிலும் நல்ல விவரணை.கதை களத்தை கண்முன் காட்டும்படி விவரித்திருக்கிறார். பூமியின் முத்திரைகள்:          இது சுமாரான கதை.நண்பனின் இறப்பை ஒட்டி அவன் நினைவுகளை பகிர்ந்துள்ளார்.இதில் வரும் விவரணைகள் எதுவும் கவரவில்லை.      மடம்:         இது முழுக்க முழுக்க கிண்டல்.இதில் மடத்தின் குருவையோ , குருவிற்க்கு அடுத்ததாக வரும் பண்டாரத்தையோ கிண்டல் செய்யவில்லை.கிண்டல் முழுக்க கனபாடிகளைத்தான்.தமிழ்நாட்டில் திராவிட கழகங்கள் இல்லாத நிலையில் இக்கதை சுவாரிஸ்யமாக இருந்திருக்கும்.ஆனால் இங்கு நாளொரு மேனியும் இதே போன்ற பிரச்சாரம் இருப்பதால் இந்த கதை ஈர்ப்புடையதாக இல்லை. லங்காதகனம்:          கதையின் போக்கு முதலிலிருந்தே ஊகிக்க கூடியதாக இருந்தது.மடத்தின் விவரிப்...